இந்தியா
சிலிக்கான் வங்கி திவாலால் பாதிக்கப்பட்ட இந்திய வங்கிகள் எவை எவை?

சமீபத்தில் அமெரிக்காவின் சிலிக்கான் வேலி வங்கி திவால் ஆனதாக அறிவிக்கப்பட்டது அந்நாட்டு மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது மட்டும் இன்றி இந்தியா உள்பட பல நாடுகளின் ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் அந்த வங்கியில் டெபாசிட்களை முதலீடு செய்திருந்ததால் அந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எதிர்காலம் என்ன என்ற கேள்விக்குரியும் எழுந்தது.
இந்த நிலையில் சிலிகான் வேலி வங்கி திவால் ஆனதை அடுத்து பாதிக்கப்படும் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் என்னென்ன என்பது குறித்த தகவல் தற்போது வெளியே வந்துள்ளது.
பெங்களூருவை தளமாகக் கொண்ட 3one4 கேபிட்டல் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம், சிலிக்கான் வேலி வங்கியில் $2.5–3 பில்லியன் வரை டெபாசிட் செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.
மேலும் சிலிக்கான் வேலி வங்கியில் சுமார் 21 இந்திய ஸ்டார்ட்அப்களில் முதலீடு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது, ஆனால் சரியான முதலீட்டுத் தொகை தெளிவாக தெரியவில்லை.
சிலிக்கான் வேலி வங்கி திவாலானதால் தாக்கம் ஏற்படும் இந்திய நிறுவனங்கள் இதுதான்:
Divitas Networks 4
Shaadi 8
CarWale 9
iCafe Manager 10
GeodesicTechniques
Sarva
Asklaila
Anantara Solutions
Games2win Media
Hitachi Payment Services
Loylty Rewardz
Genesis Colors
iYogi
TutorVista
BlueStone
Naaptol
Bharat Financial Inclusion
Paytm Mall
One97 Communications
Paytm
இருப்பினும், Paytm நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா, சிலிக்கான் வேலி வங்கியில் முதலீடு செய்த தொகை பெரும்பாலும் திரும்ப பெறப்பட்டுவிடது என்றும், தற்போது $1.7 மில்லியன் மட்டுமே முதலீடு செய்திருப்பதாகவும் தெரிவித்தார். அதேபோல் InMobi நிறுவனத்தினர் கூறியபோது, கடந்த காலத்திலோ அல்லது தற்போதும் நாங்கள் சிலிக்கான் வேலி வங்கியில் எந்தப் பணத்தையும் முதலீடு செய்ததில்லை,” என்று தெரிவித்துள்ளது.
ஆனால் குறைந்தது 40 இந்திய ஸ்டார்ட்அப்கள் ஒவ்வொன்றும் $250,000 முதல் $1 மில்லியன் வரை சிலிக்கான் வேலி வங்கியில் வைப்புத்தொகையைக் கொண்டுள்ளன என்று கூறப்படுகிறது.