இந்தியா
அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறாரா சோனியா காந்தி?

காங்கிரஸ் கட்சியின் 85-வது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, இந்திய ஒற்றுமை பயணத்துடன் தனது இன்னிங்ஸ் முடிவடைந்ததில் மகிழ்ச்சியடைவதாக கூறினார். இது காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

#image_title
இந்த கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, பாஜகவை கடுமையாக தாக்கி பேசினார், மிக மோசமான வெறுப்பை தூண்டுவதாகவும், சிறுபான்மையினர், பெண்கள், தலித்துகள் மற்றும் பழங்குடியினரை மோசமாக குறிவைப்பதாகவும் குற்றம் சாட்டினார். டாக்டர் மன்மோகன் சிங்கின் திறமையான தலைமையில் 2004 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் பெற்ற வெற்றிகள் எனக்கு தனிப்பட்ட திருப்தியை அளித்தன, ஆனால் எனது அரசியல் பயணத்தை பாரத் ஜோடோ யாத்ராவுடன் முடிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த யாத்திரை காங்கிரசுக்கு ஒரு திருப்புமுனையாக வந்துள்ளது. இந்திய மக்கள் நல்லிணக்கம், சகிப்புத்தன்மை மற்றும் சமத்துவத்தை பெருமளவில் விரும்புகிறார்கள் என்பதை இது நிரூபித்துள்ளது. இது மக்களுடன் காங்கிரஸ் நிற்கிறது என்பதையும் அவர்களுக்காகப் போராடத் தயாராக உள்ளது என்பதையும் காட்டுகிறது. பாரத் ஜோடோ யாத்ராவுடன் எனது இன்னிங்ஸ் முடிவடைந்ததில் மகிழ்ச்சியடைவதாக சோனியா காந்தி கூறினார்.
சோனியா காந்தியின் இந்த கருத்து காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அல்கா லம்பா, அவர் ஓய்வு பெறவில்லை, ஆனால் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை ஆசீர்வதித்து வழிநடத்துவார் என்று விளக்கம் அளித்துள்ளார். மேலும் அவர் தலைவர் பதவியில் இருந்த காலம் போய் தற்போது தலைவராக இல்லாமல் உள்ளார் அதை தான் அப்படி குறிப்பிட்டார். இதற்கும் அரசியலில் இருந்து விலகுவதற்கும் எந்த தொடர்பும் இல்லை என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.