தமிழ்நாடு
இளம்பெண்ணுடன் இன்பநிதி புகைப்படம் வைரல்.. அம்மா கிருத்திகா உதயநிதி என்ன சொன்னார் தெரியுமா?
Published
4 weeks agoon
By
Shiva
தமிழக அமைச்சர் உதயநிதி மற்றும் அவரது மனைவி கிருத்திகா உதயநிதியின் மகன் இன்பநிதி ஒரு இளம்பெண்ணுடன் இருக்கும் புகைப்படம் நேற்று இரவு முதல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் குறித்து பல சர்ச்சைக்குரிய பதிவுகள் நெட்டிசன்கள் பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில் இன்பநிதியின் அம்மா கிருத்திகா உதயநிதியின் ட்விட் வைரலாகி வருகிறது.
திமுக தலைவர் முக ஸ்டாலின் குடும்பம் குறித்து அவதூறாக பேசுவதற்கு என்றே ஒரு கூட்டம் இணையதளங்களில் கிளம்பி உள்ளது என்றும் ஏதாவது ஒரு செய்தி லீக் ஆனால் உடனே அதை வைத்து வதந்தியை பரப்பி வருவது அவர்களது தொழிலாக இருந்து வருகிறது என்பதும் தெரிந்ததே.
அந்த வகையில் முதல்வர் முக ஸ்டாலின் பேரனும் உதயநிதியின் மகனுமான இன்பநிதி தற்போது லண்டனில் உயர்கல்வி படித்து வரும் நிலையில் அவர் ஒரு இளம்பெண்ணுடன் இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த பெண்ணுக்கும் இன்பநிதிக்கும் என்ன உறவு? நட்பா காதலா? என்று கூட தெரியாமல் இந்த புகைப்படம் குறித்து சர்ச்சைக்குரிய பதிவுகளை நெட்டிசன்கள் சிலர் பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்பநிதியின் தாயார் கிருத்திகா உதயநிதி தனது டுவிட்டர் பக்கத்தில் காதலிக்கவோ, காதலை வெளிப்படுத்தவோ அஞ்சக் கூடாது என்றும் காதல் என்பது இயற்கையின் மகிமைகளை அறியும் வழிகளில் ஒன்று என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த பதிவிற்கு ஏகப்பட்ட லைக்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கிருத்திகா உதயநிதி கல்லூரியில் படிக்கும்போதே உதயநிதியை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் என்பதும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இருவரும் ஒற்றுமையாக பல ஆண்டுகள் வாழ்ந்து வருகிறார்கள் என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் காதலித்து திருமணம் செய்த உதயநிதி – கிருத்திகா தம்பதியினர் ஒருவேளை தங்கள் மகன் காதலித்தாலும் அதற்கு நிச்சயம் பச்சைக்கொடி காட்டுவார்கள் என்று கூறப்பட்டு வருகிறது .
Don't be afraid to love and express it. It's one of the ways to understand nature in it's full glory.
— kiruthiga udhayanidh (@astrokiru) January 5, 2023
You may like
-
ஒரு நபரின் கையில் எல்லா திரையரங்குகளுமா? உதயநிதியை மறைமுகமாக தாக்கினாரா திருமாவளவன்?
-
உதயநிதி மகன் வந்தாலும் ‘வாழ்க’ சொல்லுவோம்: அமைச்சர் கே.என்.நேரு
-
அமைச்சர் ஆனதும் முதல் அறிக்கை: வருத்தம் தெரிவித்த உதயநிதி ஸ்டாலின்!
-
தமிழக அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்.. யார் யாருக்கு எந்த துறை! முழு தகவல்கள்..!
-
விக்ரம் படத்தையும் விட்டு வைக்காத ரெட் ஜெயண்ட் மூவீஸ்: அதிகாரபூர்வ அறிவிப்பு
-
உதயநிதிக்கு கேக் ஊட்டிய கீர்த்தி சுரேஷ்: வைரல் புகைப்படங்கள்!