இந்தியா
ஒரே இரவில் கோடீஸ்வரன் ஆன பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி: எப்படி தெரியுமா?

கேரளாவைச் சேர்ந்த பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி ஒருவர் ஒரே இரவில் கோடீஸ்வரனான நிகழ்வு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது
தமிழகத்தில் லாட்டரி சீட்டுகள் தடை செய்யப்பட்டிருந்தாலும் அண்டை மாநிலமான கேரளா உள்பட பல மாநிலங்களில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் கேரளாவில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சிறப்பு லாட்டரி சீட்டு சமீபத்தில் விற்பனை செய்யப்பட்டது.
300 ரூபாய் மதிப்புள்ள இந்த லாட்டரி சீட்டு முதல் பரிசு 12 கோடி என்றும் இரண்டாவது பரிசு மூன்று கோடி என்றும் மூன்றாவது பரிசு 60 லட்ச ரூபாய் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தச் லாட்டரி சீட்டுகளை கேரளா உள்பட பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வாங்கினர் என்பதும் ஏற்கனவே அச்சடிக்கப்பட்ட லாட்டரி சீட்டுகள் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு விட்டதால் மீண்டும் ஒருமுறை கேரள அரசு லாட்டரி சீட்டுகளை அடித்து விற்பனை செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் திருவனந்தபுரம் அரசு அதிகாரிகள் முன்னிலையில் நேற்று நடந்த குலுக்களில் முதல் பரிசுக்கான எண் அறிவிக்கப்பட்டது. இந்த பரிசை கோட்டயம் அருகே வசிக்கும் பெயிண்ட் தொழிலாளி சதானந்தன் என்பவருக்கு கிடைத்துள்ளது. அவருக்கு 12 கோடி பரிசு கிடைத்தாலும் வரிகள் போல கையில் எட்டரை கோடி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. பரிசை வென்ற சதானந்தன் தனது குழந்தைகளுக்கு நல்ல படிப்பு, நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பேன் என்றும் என்னால் முடிந்த அளவுக்கு ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வேன் என்றும் கூறியுள்ளார்
நேற்று முன்தினம் வரை தினக்கூலி வேலை செய்து வந்த பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி சதானந்தன் இன்று கோடீஸ்வரர் ஆகி இருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது



















