சினிமா செய்திகள்
அயோத்தி படம் அருமையா இருக்குய்யா! சசிகுமாரை ஆரத்தழுவி பாராட்டிய சீமான்!

இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த வாரம் வெளியான அயோத்தி படம் பலரது பாராட்டுக்களை அள்ளி வெற்றிநடை போட்டு வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தற்போது அந்த படத்தை பார்த்து விட்டு படக்குழுவினரையும் நடிகர் சசிகுமாரையும் வெகுவாக பாராட்டி உள்ளார். அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.
சினிமா இயக்குநர் மற்றும் நடிகரான சீமான் தொடர்ந்து நல்ல திரைப்படங்களை பார்ப்பதையும் பாராட்டுவதையும் தவிர்ப்பதே இல்லை. நாம் தமிழர் கட்சியை தொடங்கி அரசியலில் மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டு வந்தாலும், அவருக்குள் இருக்கும் கலைஞன் இன்னமும் அப்படியே உயிர்ப்புடன் இருப்பது இதுபோன்ற நிகழ்வுகளில் கண்கூடாக தெரிகிறது.

#image_title
அயோத்தி டு ராமேஸ்வரம் ஒரு பிணத்தை சுமந்துக் கொண்டு சொந்த ஊருக்கு கூட்டிச் செல்லும் வேலையை தலை மேல் ஏற்றுக் கொண்டு செய்யும் நபராக சசிகுமார் இந்த படத்தில் வாழ்ந்துள்ளார். இயக்குநர் மந்திரமூர்த்தி மத நல்லிணக்கத்தை எந்தவொரு பிரச்சார நெடியும் இல்லாமல் சொல்லி அனைவரது கவனத்தையும் வெகுவாக கவர்ந்துள்ளார்.

#image_title
இந்நிலையில், சீமான் படத்தை பார்த்து விட்டு இயக்குநர் மந்திரமூர்த்தியை ஒரு கையையும் சசிகுமாரை ஒரு கையையும் பிடித்துக் கொண்டு வரும் காட்சிகளும், படக்குழுவினரை ஆரத் தழுவி பாராட்டும் புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.