தமிழ்நாடு
94 வயதில் மறைந்தார்.. வெளியிடப்பட்டது கருணாநிதியின் இறப்பு சான்றிதழ்!

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் இறப்பு சான்றிதழ் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நல குறைவு காரணமாக கடந்த செவ்வாய் கிழமை மாலை மரணம் அடைந்தார். தமிழகத்திற்கு இது மிகப்பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது.
தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுக்க இதற்காக துக்கம் அனுசரிக்கப்படுகிறது. அவரது உடலுக்கு மெரினாவில் மக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

வெளியிடப்பட்டது கருணாநிதியின் இறப்பு சான்றிதழ்!
ஆயிரக்கணக்கில் மக்கள் வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள். தற்போது கருணாநிதியின் இறப்பு பதிவு செய்யப்பட்டு உள்ளது. பதிவு செய்யப்பட்ட அந்த சான்றிதழ் தற்போது வெளியாகி இருக்கிறது.
அந்த சான்றிதழை சென்னை மாநகராட்சி வழங்கியுள்ளது. 94 வயதில் 7-8-2018 அன்று இறந்ததாக அதில் கூறப்பட்டுள்ளது.


















