சினிமா செய்திகள்
‘அடிச்ச துரத்த வரும் கர்ணன்’ #KarnanTeaser

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வரும் ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி ரிலீஸாகிறது கர்ணன் திரைப்படம். அந்தப் படத்தின் டீசர் தற்போது ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி இருக்கிறது. அதிலும் ‘கண்டா வரச் சொல்லுங்க’ மற்றும் ‘பண்டாரத்திப் புராணம்’ பாடல்கள் ரசிகர்களின் பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது.
இதனால் படம் குறித்தான எதிர்பார்ப்பு விண்ணளவு உயர்ந்துள்ளது. முன்னதாக மாரி செல்வராஜ் இயக்கிய ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் சாதியப் பிரச்சனை குறித்துப் பேசி கவனம் பெற்றது.
இந்நிலையில் கர்ணன் திரைப்படும் அதைப் போன்று சமூகப் பிரச்சனையை பேசும் என்று தெரிகிறது.