சினிமா செய்திகள்
நடிகர் தனுஷூக்கு மதுரை ஐகோர்ட் கிளை நோட்டீஸ்!

தனுஷ் நடிப்பில் மாரி செல்வன் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன்.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ஏப்ரல் 9ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டீசர் இன்று இரவு 7 மணிக்கு வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த படம் குறித்த வழக்கில் மதுரை ஐகோர்ட் தனுஷ், மாரி செல்வராஜ் ஆகியோர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கர்ணன் படத்தில் இடம் பெற்ற பண்டாரத்தி புராணம்பாடலை நீக்கக்கோரி வழக்கு ஒன்று மதுரை ஐகோர்ட் கிளையில் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் பண்டாரத்தி புராணம் பாடலை நீக்க கோரும் வழக்கில் நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் மாரி செல்வராஜ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்த பண்டாரத்தி புராணம் என்ற பாடல் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய அளவில் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.

















