Connect with us

தமிழ்நாடு

கண்ணகி வழிபாடும் தமிழ்நாடும் – பூம்புகார் முதல் மெரீனா பீச் வரை

Published

on

தமிழில் உருவான ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தின் தலைவி, கற்பில் சிறந்தவளாக உருவகப்படுத்தப்பட்டவள், பொய்க் குற்றச்சாட்டின் காரணமாக உயிர்நீத்த தனது கணவனின் குற்றமற்ற தன்மையை நிருபிக்க பாண்டியன் நெடுஞ்செழியனிடம் வாதிட்டவள், தனது கற்பின் வலிமையால் மதுரை நகரை எரித்தவள், பின்னர் சேர நாட்டிலிருந்து விண்ணுலகு சென்றவள் கண்ணகி என சிலப்பதிகாரம் நமக்கு கற்பித்திருக்கிறது.

திராவிட மக்கள் பெண்களை மதிக்க அச்சாணியாக இருந்த கண்ணகியின் வாழ்க்கை வரலாறும் அது நமக்கு ஊட்டிய உணர்வும் தென்னிந்திய பகுதிகளில் பெண் தெய்வ வழிபாடாக உருவானது. தமிழகத்திலும் ஆந்திராவிலும் நடைடபற்று வரும் மாரியம்மன் வழிபாடும் கேரளாவிலும் கர்நாடகத்திலும் நடைபெறும் பகவதி வழிபாடும் கண்ணகி என்ற பத்தினி தெய்வத்தின் வழிபாட்டின் திரிபுகளாகும். ஆரியர்களின் வருகையின் போது நமது வழிபாட்டு முறைகளின் மீது தேவையற்ற திணிப்புகளைச் செய்தே இன்றுள்ள வழிபாட்டு முறைகள் நடைமுறையிலிருக்கின்றன.

தமிழர்களின் பத்தினி தெய்வமான கண்ணகி வழிபாட்டிலிருந்து தான் கேரளத்தில் பகவதி வழிபாடு தோன்றியது. கண்ணகி வழிபாட்டில் பழந்தமிழர்களின் கொற்றவை வழிபாடு, இந்து சமயத்தின் காளி வழிபாடு, சமணர்களின் பத்மாவதி வழிபாடு, பௌத்தர்களின் தாராதேவி வழிபாடு ஆகியவை அணைத்தும் இணைந்தே பகவதி வழிபாடாக உருவாயிற்று என்று தமிழ் இலக்கியத்தில் “தாய் தெய்வ வழிபாடு“ என்ற ஆய்வு நுாலில் பி.எல்.சாமி அவர்கள் குறிப்பிடுகிறார்.

தமிழ்சாட்டில் மாரியம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு எல்லாம் கண்ணகி வழிபாட்டின் பின்னரே தோன்றியது என்று டாக்டர் மு.வ. அவர்கள் கூறியுள்ளார்.

சேர நாட்டிலே பத்தினி தெய்வமாகப் போற்றப்பட்டவர் இலங்கையிலே சிங்கள மக்கள் மத்தியில் பத்தினி தெய்யோ என வணங்கப்படுகிறார். இலங்கை முழுவதும் அமைந்துள்ள நுாற்றுக்கும் மேற்பட்ட பத்தினி தெய்யோ என்ற கண்ணகி அம்மனுக்கான கோயில்களே இதற்கு சான்று.

ஆண.டுதோறும் சித்திரை பவுர்ணமி அன்று தேனி மாவட்டம் கேரள எல்லை குமுளி மலைப்பாதை உச்சியில் உள்ள மங்கலதேவி கோயிலில் கண்ணகி விழா தமிழ்நாட்டு அரசால் சிறப்பாக நடத்தப்படுகிறது. அன்றைய நாளில் பெண்கள் கண்ணகிக்கு பொங்கல் வைத்து சிறப்பாக கொண்டாடுகின்றனர்.  இப்போதெல்லாம் ஒவ்வொரு பவுர்னமி நாளிலும் தமிழர்கள் அங்கு சென்று வழிபட்டு வருகின்றனர்.

சான்றோர்களின் வரிசையில் மட்டுமே கண்ணகியின் நின்ற கோலத்தை சிலையாகக் கண்டோம். இனி வரும் நாள்களில் வழிபடும் விக்கிரகமாக கண்ணகியை கோயிலில் தரிசிக்கவே அணைவரும் விரும்புகின்றனர்.

சிலப்பதிகார காவியத்தை அடிப்படையாகக் கொண்ட முதல் தமிழ் திரைப்படம் 1942ல் ஆர்.எஸ்மணி இயக்கிய கண்ணகி என்ற திரைக்காவியமாகும். பின்னர் 1964ல் கலைஞரின் கைவண்ணத்தில் –

பூம்புகார் திரைப்படம் வெளியாகி இன்று வரை அணைவராலும் பேசப்பட்டு  வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பூம்புகார்நகரில் கலைஞர் உருவாக்கிய சிலப்பதிகார கோட்டம் கண்ணகி புகழ்பாடி நிற்கிறது. சென்னை திருவல்லிக்கேணி கடற்கரை சாலையில் கலைஞர் நிறுவிய கண்ணகி சிலையை வாஸ்து காரணங்களைக் கூறி ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் 2001 டிசம்பரில் அகற்றப்பட்டு நீதி கேட்ட கண்ணகி சிலை  மீண்டும் 2006 ஜீன் கலைஞர் ஆட்சிக்காலத்தில் மீண்டும் அதே இடத்தில் நிறுவப்பட்டதும் வேறு கதை.

வான்புகழ் வள்ளுவனுக்கு சென்னையில் கோட்டமும் கன்னியாகுமரி கடலில் வானுயர்ந்த சிலையும் அமைத்துத் தந்த நமது தமிழ்நாடு அரசு கண்ணகிக்கும் காலத்தால் அழியாத நினைவுச் சின்னம் ஒன்று அமைத்துத் தர வேண்டும் என்பது அணைவரின் விருப்பமாகவும் உள்ளது. காலம் பதில் சொல்லட்டும்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

Translate »
Free Bio Link Page with DR68 Power Create custom bio pages, sell products, collect leads, and pass high DR authority Create custom bio pages, sell products, collect leads, and pass high DR.