தமிழ்நாடு
பெண்களை இழிவுபடுத்துவது கண்டிக்கத்தக்கது: ஆ ராசாவை கண்டித்த கனிமொழி

திமுக உள்பட ஒருசில கட்சிகளில் பேச்சாளர்கள் அநாகரிகமாக மேடையில் பேசுவதை வழக்கமாக கொண்டு உள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் அந்த வகையில் திமுகவை சேர்ந்த ஆ ராசா சமீபத்தில் தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் முதல்வரை கொச்சையாக பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் சுகப் பிரசவத்தில் பிறந்த குழந்தை என்றும் அதே நேரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறப்பு குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை ஆ ராசா தெரிவித்தார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் நடுநிலை வாக்காளர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆ ராசாவின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கனிமொழி எம்பி டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: அரசியல் தலைவர்கள் யாராக இருந்தாலும் பெண்களை இழிவு படுத்தி தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது. இதை எல்லோருமே மனதிலே வைத்துக்கொண்டால் இந்த சமூகத்திற்கு நல்லது. இதுதான் திராவிட இயக்கமும் பெரியாரும் விரும்பிய சமூகநீதி ஆகும்.
அரசியல் தலைவர்கள் யாராக இருந்தாலும் பெண்களை இழிவு படுத்தி தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது.
இதை எல்லோருமே மனதிலே வைத்துக்கொண்டால் இந்த சமூகத்திற்கு நல்லது. இதுதான் திராவிட இயக்கமும் பெரியாரும் விரும்பிய சமூகநீதி ஆகும்.
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) March 26, 2021





















