தமிழ்நாடு
ரஜினியோடுதான் கூட்டணி சேரும் கட்சி இதுதான்! விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ரஜினிகாந்துடன் கூட்டணி வைக்கப் போவதாகவும் இதுதொடர்பாக விரைவில் அறிவிப்போம் என்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மதுரையில் இன்று தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களின் ஆதரவு கிடைத்து விடுமோ என்ற பயத்தில் தான் எனக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு தடை விதிக்க முயற்சி செய்கின்றனர் என்று கூறினார்.
மேலும், அரசியலில் நேர்மை என்பது வெகு சிலருக்கே உண்டு. ஆனால் அது கட்சிக்கும் இருக்க வேண்டும். அதனால் தான் மக்கள் நீதி மய்யம் களத்தில் இறங்கியுள்ளது. ரஜினியுடன் கூட்டணி வைப்பது குறித்து கடந்த ஆண்டே நான் கூறிவிட்டேன். டிசம்பர் 31 ஆம் தேதி வரையில் பொறுத்திருந்து பார்ப்போம். கட்சியின் அந்தரங்கத்தைப் பற்றி இப்போது கூற முடியாது. விரைவில் மூன்றாம் அணி குறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்.
இவ்வாறு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.


















