சினிமா செய்திகள்
என் அண்ணனின் கடைசி படம்: கமல்ஹாசனின் நெகிழ்ச்சி பதிவு!

உலகநாயகன் கமலஹாசன் தன் சகோதரர் சந்திரஹாசன் நடித்த கடைசி படம் இதுதான் என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து அந்த படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் டிரைலரையும் வெளியிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
உலக நாயகன் கமல்ஹாசனின் சகோதரர் சந்திரஹாசன் என்பதும் அவர் ராஜபார்வை, பெண், இந்திரா, ஹேராம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவர் நடித்த கடைசி படம் அப்பத்தாவ ஆட்டைய போட்டுட்டாங்க’ என்பதும் இந்த படத்தை ஸ்டீபன் ரங்கராஜ் என்பவர் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த படத்தின் பணிகள் தற்போது முடிவடைந்து இந்த படம் வரும் அக்டோபர் 8ஆம் தேதி சோனி ஓடிடியில் வெளியாக உள்ளதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார். மேலும் இந்த படத்தின் டிரைலரையும் அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த டிரைலர் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த படம் குறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: என் திறமையை வெளிப்படுத்தும் பேரார்வத்தில் தன்திறமையை திரையில் காட்டாமலே போய்விட்டவர் சந்திரஹாசன்.அவர் நடித்த கடைசிபடம்‘அப்பத்தாவ ஆட்டைய போட்டுட்டாங்க’அக்டோபர் 8ம் தேதி @SonyLIV -ல் வெளியாகிறது. என்னை வாழ்த்தியவரை வணங்க கடமைப்பட்டுள்ளேன் ‘ஐயா..அப்பா..உங்கள் படம் 8ம் தேதி ரிலீஸ்’ என பதிவு செய்துள்ளார்.
என் திறமையை வெளிப்படுத்தும் பேரார்வத்தில் தன்திறமையை திரையில் காட்டாமலே போய்விட்டவர் சந்திரஹாசன்.அவர் நடித்த கடைசிபடம்‘அப்பத்தாவ ஆட்டைய போட்டுட்டாங்க’அக்டோபர் 8ம் தேதி @SonyLIV-ல் வெளியாகிறது.என்னை வாழ்த்தியவரை வணங்க கடமைப்பட்டுள்ளேன் ‘ஐயா..அப்பா..உங்கள் படம் 8ம் தேதி ரிலீஸ்’(1/2
— Kamal Haasan (@ikamalhaasan) October 5, 2021