செய்திகள்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை 2ம் கட்டம்: விண்ணப்பத்தில் தவறுகள் தவிர்க்க வேண்டிய முக்கிய அறிவிப்பு!
Published
1 வருடம் agoon
By
Poovizhi
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க தேவையான முக்கிய தகவல்கள் குறித்த அரசின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இப்போது நடைபெற்று வரும் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களில் இரண்டாம் கட்டமாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு முகாமிலும் நான்கு கவுண்டர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
இத்திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள், குடும்ப அட்டை எண், ஆதார் எண், வங்கிக் கணக்கு எண், IFSC குறியீடு ஆகியவற்றை சரியாகப் பூர்த்தி செய்ய வேண்டும். மேலும், இதற்கான சான்றிதழ்களின் அசல் நகல்களும் விரைவாக தயாராக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பலரும் இந்த விவரங்களை சரியாக பூர்த்தி செய்யாமல் தவறுகள் செய்கிறார்கள் என அரசு கவலை தெரிவித்துள்ளது. அதனால், புதிய விண்ணப்பதாரர்கள் இந்த விஷயங்களை கவனத்தில் எடுத்து, பிழை இல்லாமல் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
முதியோர் உதவித் தொகை, விதவை உதவித் தொகை அல்லது மாற்றுத் திறனாளி உதவித் தொகை பெற்றுவரும் குடும்பத்திலும் தகுதியுள்ள பெண்கள் இருந்தால், அவர்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
மேலும், அரசின் மானிய உதவியுடன் கார் அல்லது டிராக்டர் வாங்கிய குடும்பத்தினரிலும் தகுதியுள்ள பெண்கள் இதில் பங்கேற்கலாம்.
தன்னார்வலர்கள் வீடுகளுக்கே சென்று திட்டத்தை விளக்கி, ஒரு துண்டுப் பிரசுரம் மற்றும் ஒரு விண்ணப்பத்துடன் மக்களிடம் விபரங்களை வழங்குகின்றனர். அந்த விண்ணப்பத்தில் தேவையான கோரிக்கைகளை பூர்த்தி செய்து, சான்றிதழ்களுடன் முகாமுக்கு சென்று ஒப்புதல் சீட்டைப் பெற வேண்டும்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

You may like

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 2026: புதிய விண்ணப்பத்திற்கு தேவையான ஆவணங்கள் என்ன?

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்: முதல்வர் அறிவித்த தகுதியான பெண்கள் யார்? முழு விவரம் இதோ!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: புதிய பயனாளிகளுக்கான பொங்கல் பரிசு என்ன? எப்போது ரூ.1000 கிடைக்கும்?

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: புதிய பயனாளிகளுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படுமா?

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை புதிய விண்ணப்பதாரர்களுக்கு மிகுந்த நற்செய்தி!



