செய்திகள்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை புதிய விண்ணப்பதாரர்களுக்கு மிகுந்த நற்செய்தி!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு புதிய பயனாளிகள் இணைவதற்கான செயல்முறை விரைவில் நிறைவடைய உள்ளதாக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நோக்கில் நடைமுறையில் உள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனாளிகளை சேர்க்கும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஜூலை 15 முதல் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் தகுதிகள் இருந்தால், முகாம்களில் உடனே விண்ணப்பிக்கலாம். தற்போது, அரசால் பெறப்பட்ட அனைத்து புதிய விண்ணப்பங்களும் பரிசீலனையில் உள்ளன. தகுதியுள்ளவர்களைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் மாநிலம் முழுவதும் மாவட்ட வாரியாக நடந்து வருகின்றன.
இந்தச் செயல்முறை முடிந்ததும், தகுதி பெற்ற பெண்கள் அதிகாரப்பூர்வமாக திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள். அத்துடன், அவர்களின் வங்கி கணக்கில் ரூ.1000 தொகை எப்போது வரவு வைக்கப்படும் என்ற விவரமும் அரசால் அறிவிக்கப்படும்.
அத்துடன், திட்டத்தின் விரிவாக்கம் குறித்த முக்கிய அறிவிப்பு இம்மாத இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.









