சினிமா செய்திகள்
கார்த்தியை அடுத்து ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் மேலும் ஒரு ‘கைதி’ நடிகர்!
Published
2 years agoon
By
Shiva
லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’கைதி’ படத்தின் நாயகனாக நடித்த கார்த்தி ஏற்கனவே மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ’கைதி’ படத்தில் நடித்த இன்னொரு நடிகரும் பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
’கைதி’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்தவர் நடிகர் அம்ஜத்கான். இவர் ஒரு சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இந்த நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் தான் இணைந்து உள்ளதாகவும் முக்கிய கேரக்டர் தனக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து தனக்கு மிகவும் மகிழ்ச்சி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இவருக்கு என்ன கேரக்டர் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று ரசிகர்கள் தற்போது விவாதம் செய்து வருகின்றனர். ஏற்கனவே இந்த திரைப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், த்ரிஷா, ஐஸ்வர்யாராய், ஜெயராம், சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர் என்ற நிலையில் தற்போது ’கைதி’ படத்தில் நடித்த அம்ஜத்கான் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏஆர் ரகுமான் இசையில் உருவாகிவரும் இந்த படம் இரண்டு பாகங்களாக தயாராகி வருகிறது என்பதும் லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
You may like
’பொன்னியின் செல்வன் 2’ அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியை அறிவிக்கும் லைகா!
காந்தாரா முதல் ஆர்ஆர்ஆர் வரை ரூ.400 கோடி வசூலித்த தென் இந்திய படங்கள்!
பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் காட்சிகளை மீண்டும் எடுக்கும் மணிரத்னம்.. என்ன காரணம்?
பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் எப்போது திரைக்கு வரும்? பாடல், டீசர், ட்ரெயர்லர் வெளியீடு எப்போது?
இந்த ஆண்டின் 3-ம் மிகப் பெரிய வெற்றிப்படம் பொன்னியின் செல்வன் 1!
‘சந்திரமுகி 2’ அறிவிப்பு நாளையா? லைகாவின் பரபரப்பு டுவிட்!