வேலைவாய்ப்பு
பாரத ஸ்டேட் வங்கி வேலை!

பாரத ஸ்டேட் வங்கியான எஸ்பிஐ வங்கியில் நிரப்பப்பட உள்ள 2000 புரோபேஷனரி அதிகாரிகள் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.
செய்யும் இடம் செய்யும்: நாடு முழுவதும்
வேலை: Probationary Officer
மொத்த காலியிடங்கள்: 2000
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள், இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
மாத சம்பளம்: ரூ. 23700-980/7-30560-1145/2-32850-1310/7-42020
வயது: 01.04.2019 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். வயது வரம்பில் சலுகை கோரும் குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் கலந்துரையாடல் தேர்வு, நேர்முகத்தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: https://bank.sbi/careers அல்லது https://www.sbi.co.in/careers என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
கட்டணம்: பொது, ஓபிசி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய விண்ணப்பதாரர்கள் ரூ.750, எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் தகவல் அளிப்புக் கட்டணமாக ரூ.125 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன், நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம்.
மேலும் முழு விவரங்கள் அறியக்கொள்ள https://www.sbi.co.in/webfiles/uploads/files/careers/010419-Detailed-Eng-PO%202019.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 22.04.2019


















