வேலைவாய்ப்பு
தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை!

எல்காட் என்றும் தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 07. இதில் மேலாளர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.
மொத்த காலியிடங்கள்: 07
நிறுவனம்: (Electronics Corporation of Tamilnadu limited(ElCOT)
வேலை: மேலாளர் – 02
வேலை: இணை மேலாளர் (நிதி மற்றும் நிர்வாகம்) – 04
கல்வித்தகுதி: CA, ICWA முடித்திருக்க வேண்டும்.
வேலை அனுபவம்: 5 ஆண்டு வேலை அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மாத சம்பளம்: ரூ. 59,300 முதல் 1,87,700 வரை.
வேலை: இணை மேலாளர் II (சட்டம்) – 01
கல்வித்தகுதி: பொறியியல் துறையில் டிப்ளமோ, சட்டத் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வேலை அனுபவம்: 5 ஆண்டு வேலை அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மாத சம்பளம்: ரூ. 56,100 முதல் 1,77,500 வரை.
வயது: 01.01.2020 தேதியின்படி வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மேலாளர் வேலைக்கு GT, SC(A) பிரிவினர் குறைந்தபட்சம் 35 வயது நிரம்பியவராகவும், GT பிரிவினர் அதிகபட்சமாக 45 வயதுக்குள்ளும், SC(A) பிரிவினர் 50 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
இதே போன்று, இணை மேலாளர் II பணிக்கு SC, MBC/DC, BC(OBCM), BCM பிரிவினர் குறைந்தபட்சம் 30 வயது நிரம்பியவராகவும், அதிகபட்சமாக 45 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.elcot.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திச் செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்துக் கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Managing Director, Electronics Corporation of TamilNadu Limited, MHU Complex, II Floor, 692, Anna Salai, Nandanan, Chennai – 600 035
மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://elcot.in/index/ என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 11.03.2020






