டிவி
ஆரிக்கு சப்போர்ட் செய்கிறாரா? இல்லை கலாய்க்கிறாரா? ஆட்டத்தைத் தொடங்கிய ஜித்தன் ரமேஷ்!

பிக் பாஸ் வீட்டில் இதுவரை தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்த வந்த ஜித்தன் ரமேஷ், இப்போது தான் தனது விளையாட்டைத் தொடங்கியுள்ளார்.
பிக்பாஸ் போட்டியின் 60வது நாள் முதல் ப்ரோமோவில், ஜித்தன் ரமேஷ் ஆரிக்கு சப்போர்ட் செய்கிறாரா? இல்லை கலாய்க்கிறாரா? என்பது போல பேசியுள்ளார்.
கால் செண்ட்டர் டாஸ்க்கில் கேட்ட கேள்விக்கு எல்லாம் ஒரு மணி நேரம் உட்கார்ந்து நான் எதற்குப் பதில் சொல்லி இருக்கவேண்டும். நானும் போனை வைத்துவிட்டுப் போய் இருப்பனே. நாமேஷனுக்கு போகக் கூடாது என்ற காரணத்துக்காக அழைப்பைத் துண்டித்தவர்கள் டாப் 6-ல் வர கூடாது என்று பலாஜி கூறுகிறார்.
அப்போது உடனே எழுந்து தனது கருத்தை முன் வைக்கும் ஜித்தன் ரமேஷ், நீ முன்னாடி வந்து இப்படி நின்று நின்று பேசி டாப் 6-ல் வர பார்க்கிறாயா? உனக்கு என்ன மனஸ்தாபம் இருக்கிறதோ, அதை எல்லாம் சொல்லிவிட்டு நீ பாட்டுக்குக் கால் கட் பின்னிட்ட. ஆரியை பார்த்து கை நீட்டி அவர் நைட் புல்லா தூங்கினாரா இல்லையா என்று உணக்கு தெரியாது. அவரு பாட்டுக்கு புலம்பிக்கொண்டு இருக்காரானு தெரியல என்று ரமேஷ் பாலாஜியை கேள்வி கேட்கிறார்.
பிக் பாஸ் போட்டி தொடங்கி 60 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை ஜித்தன் ரமேஷ் எங்கும் தனது கருத்தை வைக்கவில்லை என்று வீட்டில் உள்ளவர்கள் விமர்சித்து வந்த நிலையில், இப்போது ஜித்தன் தனது ஆட்டத்தை தொடங்கிவிட்டார் என்பது போல உள்ளது.
ஆனால் இது லக்சரி பட்ஜெட் டாஸ்க் தான், சண்டை போடுவதை நிறுத்திவிட்டு ஒரு வரிசையில் நின்றால் பிக் பாஸ் லக்சரி பட்ஜெட் புள்ளிகளை வழங்குவார். அதை வைத்து ரேஷன் பொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்கிக்கொள்ளலாம். ஆனால் இது என்னவோ எவிக்ஷன் நாமினேஷன் பிராசஸ் போல பிக் பாஸ் போட்டியாளர்கள் சண்டை போட்டுக்கொண்டு இருப்பது வேடிக்கையாக உள்ளது.