Connect with us

சினிமா

ஓடிடி-யில் ரிலீசாகும் ‘பூமி’ – ஜெயம் ரவி உருக்கம்

Published

on

Bhoomi

ரோமியோ ஜலியட், போகன் படங்களை இயக்கிய லக்ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிதி அகர்வால், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘பூமி’. கதை திருட்டு விவகாரத்தில் சிக்கிய இப்படத்தின் அனைத்து சிக்கல்களும் சமீபத்தில் தான் சரி செய்யப்பட்டது. தவிர, ஜெயம் ரவியின் ’25’வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இமான் இசையமைத்துள்ள இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக ஏற்கெனவே தகவல் வெளியான நிலையில் அதை படக்குழு உறுதி செய்துள்ளது. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பொங்கல் தினத்தில் ‘பூமி’ திரைப்படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நடிகர் ஜெயம் ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனது நீண்ட திரைப்பயணம் முழுக்க, முழுக்க ரசிகர்களாகிய உங்களால் ஆனது. நீங்கள் அளித்த அளவற்ற அன்பு என்மேல் நீங்கள் வைத்த மிகப்பெரும் நம்பிக்கை, நீங்கள் அளித்த உத்வேகம் தான், சிறப்பான படங்களில் நான் பணியாற்ற காரணம். எனது கடினமான காலங்களில் என்னை உங்களின் சொந்த ரத்தம் போலவே நினைத்து ஆதரவளித்தீர்கள்.

உங்களின் இந்த ஆதரவோ, சினிமா மீதான எனது காதலை நிலைபெற செய்தது. நீங்கள் இல்லாமல் என்னால் இத்தனை தூரம் வெற்றிகரமாக பயணித்திருக்க முடியாது. உங்களை எனது குடும்பத்தினராகவே கருதுகிறேன் ‘பூமி’ திரைப்படம் எனது சினிமா பயணத்தில் ஒரு மைல் கல். இந்தப் படம் எனது திரைப்பயணத்தில் 25-வது படம் என்பதைத் தாண்டி என் மனதிற்கு மிகவும் நெருக்கமான படம். கோவிட் -19 காலத்தில் ரிலீஸாகும் படங்களின் வரிசையில் இந்தப் படமும் இணைந்திருக்கிறது.

இந்தப் படத்தின் மூலம் உங்கள் இல்லம் தேடி உங்கள் வரவேற்பறைக்கே வரவுள்ளது. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் உடன் இணைந்து உங்களின் 2021 பொங்கல் கொண்டாட்டத்தில் பங்கு கொள்வதில் நான் பெருமை கொள்கிறேன். நிறைய பண்டிகை காலங்களில் திரையரங்கில் வந்து எனது திரைப்படத்தைப் பார்த்து பண்டிகையை கொண்டாடியுள்ளீர்கள். இந்த பொங்கல் பண்டிகை தினத்தில் எனது அழகான திரைப்படத்துடன் உங்கள் வீட்டில் உங்களை சந்திப்பதை ஆசிர்வாதமாக கருதுகிறேன்” என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அச்சு அசலாக MGR போலவே இருக்கும் அரவிந்த்சாமி – இது வைரல் ரகம் #Thalaivi

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்9 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: சில அதிகாரிகளுக்கு ரூ.90 லட்சம் அரியர் கிடைக்குமா? முழு கணக்கீடு மற்றும் உண்மை நிலை!

வணிகம்9 மணி நேரங்கள் ago

POMIS திட்டம்: ரூ.15 லட்சம் முதலீட்டில் மாதம் ரூ.9,250 வருமானம்! அஞ்சலகத்தின் பாதுகாப்பான சேமிப்பு திட்டம்!

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

SBI PO ஆட்சேர்ப்பு 2026: 1,500 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! பட்டதாரிகளுக்கு வங்கிப் பணியில் சூப்பர் வாய்ப்பு!

வணிகம்9 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: பணிக்கொடை உச்சவரம்பு ரூ.50 லட்சமாக உயருமா? அரசு ஊழியர்கள் வைத்துள்ள முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

ஜூலை 2 முதல் சனி நட்சத்திர பாத மாற்றம்: உத்தியோகம், பணவரவு, ஆரோக்கியத்தில் ஜாக்பாட் அடிக்கும் 4 ராசிகள்!

வணிகம்9 மணி நேரங்கள் ago

EPFO 3.0: UPI மூலம் PF பணம் எடுக்கும் புதிய வசதி! இனி சில நிமிடங்களில் பணம் வங்கிக் கணக்கில்!

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

ஜூன் 28-ல் குரு – செவ்வாய் அரிய சேர்க்கை: லாப திருஷ்டி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்!

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: கடக ராசிக்குள் நுழைந்த புதன்! இந்த 5 ராசிகளுக்கு லட்சுமி கடாட்சம், பணவரவு மற்றும் அதிர்ஷ்ட மழை!

தினபலன்21 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூன் 2026 (திங்கட்கிழமை)

ஆரோக்கியம்2 நாட்கள் ago

நட்ஸ் சாப்பிட சிறந்த நேரம் எது? எடை குறைப்பு மற்றும் ஆற்றல் அதிகரிப்புக்கு நிபுணர்கள் சொல்வது இதுதான்!

இந்தியா7 நாட்கள் ago

சாஃப்ட்வேர், எம்பிஏ ‘மவுசு’ ஓவர்! ஒயிட் காலர் வேலைகளுக்கு AI ஆப்பு! பெருகி வரும் வேலை வாய்ப்பின்மை இளைஞர்களுக்கு தலைமை பொருளாதார ஆலோசகரின் ‘அதிமுக்கிய’ அட்வைஸ்!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.06.2026

கிரிக்கெட்6 நாட்கள் ago

பிபா உலகக் கோப்பையில் சர்ச்சை கிளப்பிய ஈரான் வீரர்! கோல் கொண்டாட்டம் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

டிப்ளமோ முடித்து வேலை செய்பவர்களுக்கு அரிய வாய்ப்பு! பகுதி நேர பி.இ படிப்புக்கு ஜூலை 12 வரை விண்ணப்பிக்கலாம்!

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் இடைத் தேர்தல் வரும்? 6ஆ? 15ஆ? 25ஆ? அல்லது 46ஆ? சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்.

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 17.06.2026

வணிகம்6 நாட்கள் ago

பணவீக்கம் உங்கள் சேமிப்பை எவ்வாறு பாதிக்கிறது? 20 ஆண்டுகளில் ரூ.50,000 செலவு ரூ.1.57 லட்சமாக மாறும் அதிர்ச்சி கணக்கு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.1.5 லட்சம் மாத சம்பளம்! இளைஞர்களுக்காக RBI வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

சினிமா6 நாட்கள் ago

திரைக்கு வரும் புதிய ஃபீல்-குட் படம்! ‘சின்ன சின்ன ஆசை’!

சினிமா6 நாட்கள் ago

#21yearsofanniyan

Translate »
Our free link building tool gives you instant access to contextual links from thousands of websites worldwide.