இந்தியா
தனி நபரின் சமூக ஊடக கணக்குகளை அணுக வருமான வரித்துறைக்கு அதிகாரம் இருக்கிறதா? – ஒன்றிய அரசு விளக்கம்.

இ,ந்தியாவில் சமூக ஊடக கணக்குகளை சுமார் 50கோடி பேருக்கும் மேல் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சமூக ஊடக கணக்குகளின் மூலம் பல பேர் வருமானம் ஈட்டியும் வருகின்றனர். இந்த வருமானங்களையும் இந்திய வருமானவரிச் சட்த்தின் கீழ் கொண்டு வந்து முறைப்படுத்திட ஒன்றிய அரசு பரிசீலனை செய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக சமூக ஊடக கணக்குகளை பராமரிப்பவர்களின் தனிப்பட்ட சுய விவரங்கள் பாதுகாப்பாக இருப்பதை கேள்விக்குரியதாக்கக் கூடிய வகையில் இவர்களின் இ-மெயில் மற்றம் டிஜிட்டல் தளங்களை அணுக வருமான வரித்துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக சமூக வலைத் தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
இதற்குசமூக ஊடக கணக்குகள் வைத்திருப்போர் மற்றும் வலைத்தளவாசிகள் தங்களது கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
வரிஏய்ப்புக்கும் சமூக ஊடக கணக்குகளுக்கும் முடிச்சு போடுவது எந்த விதத்தில் நியாயம்? சமூக ஊடக கணக்குகளை அணுகுவதன் மூலம் அதை பயன்படுத்துபவர்களின் தனிப்பட்ட உரிமைகள் பறிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து ஒன்றிய அரசின்பத்திரிக்கை தகவல் அலுவலக தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள விளக்கத்தில் உள்ளதாவது…
வருமான வரிச்சட்டம்2025 பிரிவு 247ல் உள்ள சரத்துக்கள் தேடுதல் மற்றும் ஆய்வு தொடர்பான செயல்பாடுகளை கண்டிப்புடன் கட்டுப்படுத்துவதாக இருக்கிறது. வரி செலுத்தபவர் வரி ஏய்ப்பு செய்ததற்கு முறையாள ஆதாரங்கள் கிடைக்காவிட்டால் அவர்களின் தனிப்பட்ட டிஜிட்டல் தளங்களை அணுக வருமான வரித்துறைக்கு அதிகாரம் இல்லை.
வழக்கமான தகவல் சேகரிப்பு செயலாக்கத்திற்குஅல்லது மீளாய்வு மதிப்பீட்டின் கீழ் உள்ள வழக்குகளுக்கு வருமான வரித்துறை தனது அதிகாரங்களை பயன்படுத்த முடியாது. இந்த நடவடிக்கைகள் குறிப்பாக தேடல் மற்றும் ஆய்வின்போது கருப்பு பணம் மற்றும் பெரிய அளவிலான வரி ஏய்ப்பை இலக்காக வடிவமைக்கப்பட்டுள்ளதே தவிர சட்டத்தை மதிக்கும் குடிமகனை அல்ல. தேடல் மற்றும் ஆய்வு நடவடிக்கைகளின் போது ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை கைப்பற்றும் அதிகாரம் வருமானவரி சட்டம் 1961 லேயே இருக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
