இந்தியா
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடர் சரிவு.. 72.73 ரூபாய் ஆனது

டெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 72.73 ரூபாய் ஆகியுள்ளது.
இந்திய வரலாற்றில் இதுதான் மிகவும் மோசம் ஆம். தொடர்ந்து இப்படி சரியாய் வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து இந்திய ரூபாயின் மதிப்பு சரிவுக்கு ஆளாகியுள்ளது. சென்ற வாரம் இந்திய ரூபாய் மதிப்பு 70.080 ரூபாயை தொட்டது.

அதன்பின் நேற்று 72.55 ரூபாய் ஆனது. இன்று காலை இந்திய ரூபாய் மதிப்பு 72.68 ரூபாயை தொட்டது.
இந்த நிலையில் தற்போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 72.73 ரூபாய் ஆகியுள்ளது.













