இந்தியா
மீண்டும் உயர்ந்த பெட்ரோல் – டீசல் விலை.. மோசமான நிலை!

சென்னை: இந்தியா முழுக்க பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மோடி ஆட்சிக்கு வந்த பின் தொடர்ந்து உயர்வை சந்தித்த விலை தற்போது உச்சத்தை அடைந்துள்ளது. மும்பைக்கு நிகராக பெட்ரோல், டீசல் விலை சென்னையில் உயர வாய்ப்புள்ளது.

பெட்ரோல், டீசல் எண்ணெய் நிறுவனங்களே ஏற்றிக்கொள்ளலாம் கூறிய பின் தொடர்ந்து விலை உயர்ந்து வருகிறது.
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 14 காசுகள் உயர்ந்தது. டீசல் விலை 23 காசுகள் அதிகரித்துள்ளது.
தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.91ஆகும். டீசல் விலை லிட்டருக்கு ரூ.77.13 ஆகும்.

















