வணிகம்
7.90% வரை வட்டி தரும் இந்தியன் வங்கியின் புதிய FD திட்டங்கள்: IND Secure மற்றும் IND Green திட்டங்களின் முழு விவரம்!
Published
1 வருடம் agoon
By
Poovizhi
இந்தியன் வங்கி தனது வட்டி விகிதங்களில் மாற்றம் செய்து, புதிய நிலையான வைப்புத் தொகை (FD) திட்டங்களை அறிவித்துள்ளது. இது மே 8, 2025 முதல் அமலில் வருகிறது. ‘IND செக்யூர்’ எனப்படும் புதிய FD திட்டம், பொதுமக்கள், மூத்த குடிமக்கள் மற்றும் சூப்பர் மூத்த குடிமக்கள் என மூன்று பிரிவுகளுக்கேற்ப அதிக வட்டி வழங்குகிறது.
IND Secure FD திட்டம் – முக்கிய அம்சங்கள்:
முதலீடு வரம்பு: ₹1,000 முதல் ₹3 கோடி வரை
பொதுமக்களுக்கு வட்டி விகிதம்: 7.15%
மூத்த குடிமக்களுக்கு: 7.65%
சூப்பர் மூத்த குடிமக்களுக்கு: 7.90%
இணைதற்கான கடைசி தேதி: 30 செப்டம்பர் 2025
IND Green FD திட்டம் – நிலையான வளர்ச்சிக்கு ஆதரவு:
முதலீடு வரம்பு: ₹1,000 முதல் ₹3 கோடி வரை
முதிர்வு காலம்: 555 நாட்கள்
பொதுமக்களுக்கு வட்டி விகிதம்: 6.80%
மூத்த குடிமக்களுக்கு: 7.30%
சூப்பர் மூத்த குடிமக்களுக்கு: 7.55%
முந்தைய FD திட்டங்கள் – தற்காலிக நிறைவு:
IND சூப்பர் 400 டேஸ் மற்றும் IND சுப்ரீம் டேஸ் திட்டங்கள் தற்காலிகமாக நிறைவேற்றப்பட்டுள்ளன.
அதற்குப் பதிலாக 444 நாட்களுக்கு 7.15% மற்றும் 555 நாட்களுக்கு 6.80% வட்டி தரும் FD திட்டங்கள் தொடர்ந்து வழங்கப்படுகின்றன.
வழக்கமான FD வட்டி விகிதங்கள்:
| FD கால அளவு | வட்டி விகிதம் (%) |
|---|---|
| 1 வருடம் | 6.10% |
| 1–2 ஆண்டுகள் | 7.10% |
| 2–3 ஆண்டுகள் | 6.70% |
| 3–5 ஆண்டுகள் மற்றும் 5 ஆண்டு | 6.25% |
சேமிப்புக் கணக்கு வட்டி விகிதங்கள் (திருத்தம்):
₹10 லட்சம் வரை: 2.90% → 2.75%
₹10 லட்சம் – ₹2 கோடி: 2.80%
₹2 கோடிக்கு மேல்: முந்தையது போலவே 2.90% தொடரும்
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.




