இந்தியா
இந்தியாவில் நேற்றைவிட இன்று கொரோனா பாதிப்பு 7.4% அதிகம்!

இந்தியாவில் இன்று புதிதாக 41,157 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் நேற்றைவிட இன்றைய பாதிப்பு 7.4 சதவீதம் அதிகம் என்று ஒன்றிய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்து உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று காரணமாக 518 பேர் உயிரிழந்து உள்ளார்கள். இதுவரை இந்திய அளவில் சுமார் 40.49 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.
மாநிலங்களைப் பொறுத்த வரையில் நாட்டிலேயே மகாராஷ்டிராவில் கடந்த 2 மணி நேரத்தில் 8,172 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

வரும் ஆகஸ்ட் மாதம் இறுதியில் இந்தியாவில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை பரவத் தொடங்கும் என்று மருத்துவ வல்லுநர்களும் துறை சார்ந்த நிபுரணர்களும் கருதுகின்றனர். அதே நேரத்தில் இரண்டாவது அலை அளவுக்கு மூன்றாவது அலை மிகக் கடுமையாக நாட்டை பாதிக்காது என்றும் கூறப்படுகிறது.
இந்தியாவில் கடந்த ஜூன் 23 ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியைத் தாண்டியது குறிப்பிடத்தக்கது.









