தமிழ்நாடு
நேற்று ஒரே நாளில் மதுபாட்டில்களை வாங்கி குவித்த குடிமகன்கள்: எத்தனை கோடிக்கு விற்பனை தெரியுமா?

தமிழகத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு இரண்டு வாரங்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்றும் இன்றும் அனைத்து கடைகளும் திறந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி டாஸ்மாக் கடைகளும் நேற்றும் இன்றும் மாலை 6 மணி வரை திறந்திருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதனை அடுத்து டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் கூட்டம் குவிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு வாரங்களுக்கும் சேர்த்து ஒரு சிலர் மதுபாட்டில்களை வாங்கிச் சென்றதாகவும் தகவல்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் டாஸ்மாக் மது விற்பனை 426 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. நாளை முதல் முழு ஊரடங்கு என்பதால் மது விற்பனை அதிகரித்துள்ளதாகவும் பெரும்பாலானோர் பாட்டில் பாட்டிலாக பைகளில் மதுபாட்டில்கலை வாங்கி கொண்டு சென்றதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
சென்னை மண்டலத்தில் மட்டும் நேற்று ஒரே நாளில் 100.43 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆகியிருப்பதாகவும், திருச்சி மண்டலத்தில் ரூ.82.59 கோடிக்கு விற்பனையாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
அதேபோல் சேலம் மண்டலத்தில் ரூ.79.82 கோடியும் மதுரை மண்டலத்தில் ரூ.87.28 கோடிக்கும் மது விற்பனை ஆகியுள்ளது. ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் இயங்காது என்பதால் சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மது பிரியர்கள் ஆயிரக்கணக்கில் மது வாங்கியுள்ளனர் என்பது இதன்மூலம் உறுதியாகியுள்ளது.
























