வேலைவாய்ப்பு
சென்னை IITயில் Full Stack Developer வேலைவாய்ப்பு – ரூ.35,000 ஊதியம்!
Published
10 மாதங்கள் agoon
By
Poovizhi
சென்னை IITயில் டெவலப்பர் வேலை – ரூ.35,000 வரை மாத ஊதியம்!
சென்னை IITயின் தொழில்துறை ஆலோசனை மற்றும் நிதியுதவி ஆராய்ச்சி அலுவலகத்தில் Full Stack Developer பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலை தற்காலிக நியமனமாக வழங்கப்படுகிறது.
காலிப் பணியிடம்:
Full Stack Developer – 1 இடம்
கல்வித் தகுதி:
கணினி அறிவியல் அல்லது தகவல் தொழில்நுட்பத்தில் பட்டம் மற்றும் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
குறைந்தது 3 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.
ஊதியம்:
மாதம் ரூ.30,000 முதல் ரூ.35,000 வரை வழங்கப்படும்.
தேர்வு முறை:
எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள் https://careers.icsr.in/about.php என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி தேதி:
விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 18, 2025 ஆகும்.
தகுதியும், அனுபவமும் உள்ளவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்!
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

















