தமிழ்நாடு
“என் உயிரே போனாலும் சந்தோஷம்தான்”.. ரஜினிகாந்த் பத்திரிக்கையாளர் சந்திப்பு முழு அறிக்கை!

ஜனவரி மாதம் அரசியல் கட்சி தொடங்குவதாக டிவிட்டரில் அறிவித்த ரஜினிகாந்த், செய்தியாளர்களைச் சந்தித்த போது என் உயிரே போனாலும் சந்தோஷம்தான் என்று கூறினார்.
அரசியல் கட்சி குறித்த முக்கிய அறிவிப்பு குறித்து ரஜினிகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்த போது, “அனைவருக்கும் வணக்கம், நான் வந்து 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ம் தேதியே சொல்லி இருந்தேன். அப்போது கார்ப்ரேசன் தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. அதில் போட்டியிடவில்லை. நாடாளுமன்றத் தேர்தலின் போது ஒரு முடிவு பண்ணினேன்.
சட்டமன்றத் தேர்தல் வரும் போது, சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னாடி கட்சி ஆரம்பித்து, 234 தொகுதிகளிலும் நான் போட்டியிடுவேன் என்று அறிவித்து இருந்தேன். அதற்குப் பின்பு நான் லீலா பேலசில், உங்களைச் சந்திக்கும் போது மக்கள் மத்தியில் எழுச்சியை உண்டாக்கவேண்டும். அதற்கு பிறகுதான் நான் அரசியல் கட்சி தொடங்குவேன் என்று சொல்லி இருந்தேன். தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்யலாம் என்று இருந்தேன்.
ஆனால் இந்த கோரோனாவால் இதை செய்ய முடியவில்லை. உங்களுக்கே தெரியும் எனக்குச் சிறு நீரக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தியை குறத்து தான் இந்த அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் செய்வார்கள். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருந்தால் இந்த அறுவை சிகிச்சை பலன் அளிக்காது.
கொரோனா வைரஸ் எதிராகப் போராட வேண்டும் என்றால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருக்க வேண்டும். அதுதான் பெரிய பிரச்சனை. இந்த நேரத்தில் மக்களைச் சந்தித்து பிரச்சாரத்தில் ஈடுபடுவது மருத்துவ ரீதியாக ஆபத்தானது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள். மக்களைச் சந்தித்து பிரச்சாரம் செய்தால்தான் நன்றாக இருக்கும் என்று சிந்தித்து வந்தேன். சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று நாடு திரும்பத் தமிழ் மக்களின் பிரார்த்தனை, ஆசீர்வாதம் எல்லாம் முக்கியமான ஒன்று.
இப்போது அவர்களுக்காக எனது உயிரே போனாலும் கூட என் அளவிற்குச் சந்தோசப்படுபவன் யாரும் இருக்க முடியாது. கொடுத்த வாக்கை நான் என்றைக்குமே தவறமாட்டேன். ஒரு அரசியல் மாற்றம் ரொம்ப கட்டாயம். காலத்தின் தேவை. ஒரு அரசியல் மாற்றம் நிகழ்ந்தே ஆகவேண்டும். அது இப்போ இல்லனா எப்பவுமே இல்ல. மாத்தனும், எல்லாத்தையும் மாத்தனும். நான் ஒரு சின்ன கருவிதான், மக்கள் நீங்கதான் முடிவு செய்ய வேண்டும். நான் வரேன் மாற்றம் நிகழவேண்டும். வெற்றி அடைந்தாலும் து உங்களின் வெற்றி, தோல்வி அடைந்தாலும் அது மக்களின் தோல்வி. எனவே இந்த மாற்றத்துக்கு எல்லோரும் என் கூட துணையாக நிற்க வேண்டும் அப்படினு சொல்லி என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களிடம் கை கூட்டி கேட்டுக்கொள்கிறேன்.
எனக்கு இன்னும் அண்ணாத்த ஷூட்டிங் 40 சதவீதம் பாக்கி உள்ளது. அதை முடிப்பது என்னுடைய கடமை. இந்த சூழலில் அதை பற்றி நீங்கள் கவலை படாதீர்கள் என்று கலாநிதி மாறன் கூறினார். ஆனால் அதை நான் முடிக்கவேண்டும். அதை முடித்துவிட்டு வருவதற்குள் டிசம்பர் 31-ம் தேதி கட்சியை அறிவிக்கிறேன் என்று சொல்லி இருக்கேன்.
இந்த கட்சி வேலை ராட்சச வேலை. அத்தனை வேலை இருக்கு. அதற்கான வேலை எல்லாம் தொடங்கிட்டோம். ஆனால் இன்னும் இருக்கும். தமிழ்மணியன் அருவி ஐயா பற்றி நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை. நான் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்தது முதல் தனக்கு அதரவாக உள்ளார். எவ்வளவோ விமர்சனங்கள் வந்தும் அவர் என்னை கைவிடவில்லை. அவரி ஒரு மேற்பார்வையாளராக இப்போது நியமித்து இருக்கேன். அவருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி.
மேலும் என்னுடன் இருக்கும் இவர் ஆர்.அர்ஜுன் மூர்த்தி, தொழில்நுட்ப வல்லுநர். இவர் எனக்கு கிடைத்தது எனது பாக்கியம். கடினமாக வேலை செய்து, என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு முயற்சிகளைச் செய்து இந்த பாதையில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை இருக்கும். ஒவ்வொருவருக்கும் ஒரு தலை எழுத்து இருக்கும். அப்படி நாட்டுக்கும் தலை எழுத்து இருக்கும். தமிழ்நாட்டுடைய தலை எழுத்தை மாற்றும் நேரம் வந்தாச்சு. நிச்சயமா அது நடுக்கும். அரசியல் மாற்றம். ஆட்சி மாற்றம். இப்ப இல்லனா எப்பவும் இல்ல. மாத்துவோம், எல்லாத்தையும் மாத்துவோம்” என்று ரஜினிகாந்த் பேசியுள்ளார்.






