தமிழ்நாடு
அர்ஜூன் மூர்த்தியுடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது: பாஜக

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சி ஜனவரி மாதம் தொடங்கப்படும், டிசம்பர் 31-ம் தேதி அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று அறிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் தொடங்க இருக்கும் கட்சிக்கு தமிழருவி மணியன் மற்றும் அர்ஜுன் மூர்த்தியை முக்கிய பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.
அர்ஜுன் மூர்த்தி ஏற்கனவே பாஜகவின் அறிவுசார் பிரிவின் மாநில தலைவராக இருந்து வந்தார். இப்போது ரஜினியின் கட்சியில் இணைந்துள்ளார். எனவே பாஜவில் கட்சிப் பொறுப்பில் இருந்து இன்றுடன் வெளியேறியுள்ளார்.
எனவே அர்ஜுன் மூர்த்தியுடன் பாஜகவினர் யாரும் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம். பாஜவின் பொறுப்புகளிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நிரந்தரமாக அர்ஜூன்மூர்த்தி விடுவிக்கப்படுகிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.






