வணிகம்
ரூ.2 லட்சம் முதலீட்டில் ரூ.5 லட்சம் வருமானம்.. அமுல் பால் கடை திறப்பது எப்படி?

இந்தியாவின் மிகப் பெரிய பால், பால் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான அமுல், 2 லட்சம் ரூபாய் முதலீட்டில் 5 முதல் 10 லட்சம் ரூபாய் வரை வருமானம் வழங்கும் பால் கடைகளைத் திறப்பதற்கான முகமை உரிமங்களை வழங்கி வருகிறது.
இந்த வருமானம் கடை உள்ள பகுதியைப் பொருத்து மாறும் என கூறப்படுகிறது. இந்த அமுல் பால் கடைகளை திறக்க 25,000 ரூபாய் பாதுகாப்பு வைப்புத் தொகையாக வழங்க வேண்டும்.
மேலும் 1.5 லட்சம் ரூபாயைக் கடையின் உள்கட்டமைப்பு பணிகளுக்காகச் செலுத்த வேண்டும். இதில் குளிர்சாதனப் பெட்டி போன்ற பால கடைக்குத் தேவையான அனைத்து பொருட்களும் வழங்கப்படும்.
அமுல் நிறுவனத்தின் இந்த பால் கடையைத் தொடங்க www.amul.com இணையதளத்தைப் பாருங்கள் அல்லது 022 – 68526666 / 1800 258 3333 என்ற எண்களைத் தொடர்புகொள்ளுங்கள்.
அமுல் பார்லர் பால் கடைகள் மட்டுமல்லாமல், அமுல் தயாரிப்புகளை விநியோகிக்கும் டிஸ்ட்ரிபியூட்டர் உரிமத்தையும் அமுல் நிறுவனம் வழங்குகிறது.
அமுல் பார்லர் பால் கடைகளைத் திறக்க 100 முதல் 300 சதுர அடி உள்ள இடம் இருந்தால் போதுமானதாக இருக்கும். பேருந்து நிலையங்கள், மால்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த பால் கடைகளைத் திறந்தால் நல்ல வருமானம் கிடைக்கும் என கூறுகிறார்கள்.
ஒருவேலை இந்த கடைகளைத் திறக்க கடன் தேவை என்றால் அதற்கும் அமுல் நிறுவனம் உதவுகிறது.
அமுல் பால் நிறுவனம் மக்களிடம் ஏற்கனவே அறிமுகம் உள்ளது என்பதால் முதலீட்டைச் செய்து சரியான இடத்தில் கடையைத் திறந்தால் மட்டும் போதும் நல்ல வருமானம் கிடைக்கும் என கூறப்படுகிறது.