வணிகம்
எஸ்பிஐ, பஞ்சாப் நேஷ்னல் வங்கி இரண்டும் தனியார்மயம் ஆகப்போகிறதா? நிதி அயோக் பட்டியலில் உள்ள வங்கிகள் எவை?
Published
4 weeks agoon
By
Tamilarasu
மத்திய அரசு இரண்டு முக்கிய வங்கி நிறுவனங்களையும் ஒரு ஜெனரல் காப்பீட்டு நிறுவனத்தையும் தனியார்மயமாக்கால் செய்வதற்கான பணியில் தீவிரமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவின் திட்டக் கமிஷன் என அழைக்கப்பட்டு வரும், நிதி ஆயோக் எந்தெந்த நிதி நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும், எவை விற்பனையிலிருந்து விலக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
நிதி ஆயோக்கின் அந்த பட்டியலில் பஞ்சாப் நேஷ்னல் வங்கி, யூனியன் வங்கி, கனரா வங்கி, எஸ்பிஐ, இந்தியன் வங்கி, பாங்க் ஆப் பரோடா வங்கிகளும் உள்ளன.
ஆனால் அரசு அதிகாரிகள் வங்கி நிறுவனங்களைத் தனியார்மயமாக்குவது குறித்து இப்போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனக் கூறுகிறார்கள்.
2022-2023 நிதியாண்டில் 1.75 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொதுத் துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்குவது குறித்து அரசு திட்டமிட்டுள்ளது. அதனைச் சென்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசின் இந்த தனியார்மயமாக்கல் முடிவுக்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.
You may like
-
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலைவாய்ப்பு!
-
எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி.. வாட்ஸ்-அப் மூலம் இந்த 9 சேவைகளை பெறலாம்!
-
ஃபிக்ஸட் டெபாசிட் கூட இனி நல்ல வருமானம் தரும்.. இன்று முதல் வட்டி உயர்வு!
-
உங்கள் எஸ்பிஐ வங்கி கணக்கில் ரூ.147.5 பிடித்தம் செய்யப்பட்டுள்ளதா? என்ன காரணம்?
-
SBI வங்கியில் வேலைவாய்ப்பு!
-
பாரத ஸ்டேட் வங்கியில் வேலைவாய்ப்பு!