Connect with us

வணிகம்

EPS ஓய்வூதியம் எப்படி கணக்கிடப்படும்? இபிஎஃப் உறுப்பினர்கள் பெறும் தொகை மற்றும் கணக்கீட்டு முறை இதோ!

Published

on

EPS ஓய்வூதியம் எப்படி கணக்கிடுவது? எவ்வளவு பெறுவீர்கள் என்பதை எளிதாக அறியுங்கள்

EPFO உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் பெற EPS திட்டம் முக்கிய பங்காற்றுகிறது. இது ஊழியர்களுக்கு 58 வயதுக்கு பிறகு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கும் திட்டம். EPS ஓய்வூதியத் தொகை உங்கள் சேவை காலம் மற்றும் சம்பளத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

EPS ஓய்வூதியம் பெற தேவையான தகுதி:

  • குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சேவை முடிக்க வேண்டும்.

  • 58 வயது பூர்த்தியாக வேண்டும் (ஓய்வூதியம் தொடங்கும் வயது).

  • 50 வயதில் ஆரம்ப ஓய்வூதியம் பெறலாம், ஆனால் குறைவான தொகை கிடைக்கும்.

EPS ஓய்வூதிய கணக்கீட்டு சூத்திரம்:

மாதாந்திர ஓய்வூதியத் தொகை = (ஓய்வூதிய சம்பளம் X சேவை ஆண்டுகள்) / 70

இதில்,

  • ஓய்வூதிய சம்பளம்: கடந்த 12 மாதங்களுக்கான அடிப்படை சம்பளம் + அகவிலைப்படி (DA)

  • ஆனால் கணக்கீட்டுக்கு உச்ச வரம்பு ரூ.15,000 ஆகவே பார்க்கப்படுகிறது.

உதாரணக் கணக்கீடு:

  • 17 ஆண்டுகள் சேவை:
    ஓய்வூதியம் = (15,000 x 17)/70 = ரூ.3,642

  • 28 ஆண்டுகள் சேவை:
    ஓய்வூதியம் = (15,000 x 28)/70 = ரூ.6,000

  • 33 ஆண்டுகள் சேவை:
    ஓய்வூதியம் = (15,000 x 33)/70 = ரூ.7,071

முக்கிய தகவல்:

ஒருவரின் சம்பளம் ரூ.79,000 இருந்தாலும் EPS கணக்கீட்டுக்கு அதிகபட்சமாக ரூ.15,000 மட்டுமே எடுத்துக்கொள்ளப்படும். மேலும் சேவை ஆண்டுகளில் 6 மாதம் மேல் இருந்தால், அடுத்த ஆண்டாக வட்டமிடப்படும்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

Translate »
Covering breaking news, local stories, business, health, public affairs, and national developments, kearney news aims to keep readers informed with clear, factual, and engaging reporting.