Connect with us

வணிகம்

EMI கட்ட முடியாவிட்டால் என்ன நடக்கும்? வங்கியின் சட்ட நடவடிக்கைகள் மற்றும் தீர்வுகள்!

Published

on

EMI கட்ட முடியாவிட்டால் ஏற்படும் விளைவுகள் மற்றும் அதற்கான சட்ட விரிவான விளக்கங்கள்

இன்றைய காலகட்டத்தில் வங்கி கடன் எடுப்பது இயல்பான ஒன்று. ஆனால் சில நேரங்களில், வருமான குறைபாடு, வேலை இழப்பு போன்ற காரணங்களால் கடன் EMI தொகையை செலுத்த முடியாமல் போகலாம். இதனால் பலருக்கும் ‘சிறைக்குச் போக வேண்டுமா?’ என்ற அச்சம் ஏற்பட்டுவிடுகிறது.

ஆனால் உண்மையில், EMI கட்டத் தவறுவது சிறையுக்கே அனுப்பும் குற்றம் அல்ல. இது ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி குடிமக்கள் மீதான குற்றச்சாட்டாகக் கருதப்படுவதில்லை.

வங்கியின் நடைமுறைகள்:

இ.எம்.ஐ தவிர்ப்பவர்கள் மீது வங்கிகள் உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க முடியாது. தொடர் தவறுகளுக்குப் பிறகு மட்டுமே வங்கி:

  • முதலில் நோட்டீஸ் அனுப்பும்

  • பிறகு பணம் வசூலிக்க வசூலிப்பாளர்களை அனுப்பலாம் (மரியாதையுடன் நடத்த வேண்டும்)

  • பணம் வசூலிக்க முடியாவிட்டால், நீங்கள் வாங்கிய சொத்துகளை ஏலம் விடலாம்

வங்கியின் கடமை என்ன?

வசூலிப்பாளர்கள் வாடிக்கையாளர்களை மிரட்டக்கூடாது என்பதே ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல். வாடிக்கையாளர்களை மரியாதையுடன் அணுக வேண்டும். சொத்தை ஏலம் விடும் முன் வாடிக்கையாளரின் அனுமதி மற்றும் தகவலை பெற்றே செயல்பட வேண்டும்.

தீர்வு என்ன?

EMI கட்ட முடியாத நிலை வந்தால்:

  • உடனே வங்கி மேலாளரை தொடர்பு கொள்ளவும்

  • கடன் கால அவகாசம் நீட்டிக்க வேண்டும் என்று கோரலாம்

  • தவிர்க்க முடியாத தனிப்பட்ட பிரச்சினைகளை விளக்கினால் வங்கிகள் பொதுவாக நெகிழ்வாக செயல்பட வாய்ப்பு அதிகம்

  • சில சமயங்களில் குறைந்த தொகையாவது செலுத்தும் முயற்சி செய்யலாம், இது CIBIL ஸ்கோர் பாதிப்பை குறைக்கும்

EMI தவிர்ப்பதால் உங்கள் CIBIL ஸ்கோர் குறையும். இது எதிர்காலத்தில் மீண்டும் கடன் வாங்கும்போது பெரிய சிக்கலாக மாறும்.

Translate »
Your first backlinks will appear within minutes — and your website gets cited on other sites at the same time..