Connect with us

இந்தியா

ஓசூர் திருப்பத்தூர் இடையே ரயில்வே பாதை அமைப்பதற்கான 2ம் கட்ட ஆலோசனைக் கூட்டம் – 50 ஆண்டு கனவுத் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்த ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு.

Published

on

பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஓசூர் ஜோலார்பேட்டை புதிய பாதை அமைத்து ரயில் விடும் பணியின் ஒரு பகுதியாக ஓசூர் திருப்பத்தூர் இடையே ரயில்வே பாதை அமைப்பதற்கான 2ம் கட்ட ஆலோசனைக் கூட்டம் ஓசூர் எச்ஐஏ அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தினஷ்குமார் மற்றும் தென்மேற்கு ரயில்வே துறை அதிகாரிகள் வருவாய்த்துறையினர் பொதுப்பணித்துறையினர் வனத்துறையினர் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள். தொழில்துறையினர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஓசூர் மக்களின் 50 ஆண்டு கால கனவுத் திட்டமான ஓசூர் ஜோலார்பேட்டை இ,டையே ரயில்பாதை அமைக்கும் திட்டத்தை மாற்றி ஓசூர் திருப்பத்தூர் இடையே ரயில்வே பாதை அமைக்கும் திட்ட அறிக்கை குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கடந்த 50 ஆண்டுகளாக சென்னை பெங்களுரு இடையே ஓசூர் கிருஷ்ணகிரி வழியாக ரயில்பாதை அமைக்க பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுப்பப்ட்டு வந்தன.

இந்த திட்டம் ரூ.4000 கோடியில் அமைக்கப்பட உள்ளது. அதில் நிலம் கையகப்படுத்த ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ரயில் பாதை அமைக்கப்பட்டால் இந்த வழியாக சரக்கு ரயில்களை இயக்க முடியும். இதனால் நேரம் மற்றும் எரிபொருள் குறையும். இந்த ரயில் பாதையில் சூளகிரி அருகே ஒரு ரயில் நிலையம் அமைக்கப்பட உள்ளது. ஓசூர் திருப்பத்தூர் ரயில்பாதை திட்டம் பெங்களுருவில் இருந்து வரும் ரயில் பாதை ஓசூர் அருகே தொரப்பள்ளி அருகே இணைக்கப்படுகிறது.

இந்த ரயில்வே பாதை அமைக்கும் பணி நிறைவு பெற்றால் ஓசூரில் உற்பத்தி செய்யப்படும் வாகனங்களை எளிதில் சென்னை துறைமுகத்திற்கு எடுத்துச் செல்ல முடியும். மேலும் ஓசூரில் உற்பத்தி செய்யப்படும் ஆப்பிள் ஐ போன், ராணுவ தளவாடங்கள், மருந்து மாத்திரைகள், ரோஜா மலர்கள், காய்கறிகள் உள்ளிட்ட அணைத்து வகை உற்பத்தி பொருட்களையும் சென்னை துறைமுகத்திற்கு எளிதில் கொண்டு செல்ல முடியும்.

இதன் மூலம் ஓசூரில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கில்் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் செலுத்தி சென்னைக்கும் பெங்களுருக்கும் செல்பவர்கள் குறைந்த கட்டணத்தில் குறைந்த நேரத்தில் பயணம் செய்ய முடியும்.

ஓசூர் மக்களின் நீணட நாள் கனவுத் திட்டம் நிறைவேறும் நாள் வந்து விட்டதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

Translate »
Sites portfolios.