வீடியோ
ஹாட் ஸ்டாரில் நேரடியாக ரிலீஸ் ஆகும் ஹிப் ஹாப் ஆதியின் அடுத்த படம்.. டிரெய்லர்!
Published
1 year agoon
By
Tamilarasu
ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகி வந்த அன்பறிவு படம் நேரடியாக ஓடிடி தளமான ஹாட் ஸ்டாரில் ஜனவரி 7-ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் சத்ய ஜோதி ஃபிளிம்ஸ் தயாரித்து வந்த படம் அன்பறிவு. புதுமுக இயக்குனர் அஸ்வின் ராம் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
அன்பறிவு படம் சிறு வயதில் பிரிந்த இரட்டையர்கள், ஒரு கட்டத்தில் சந்தித்த பிறகு அவர்கள் எடுக்கும் முடிவால் என்ன ஆகிறது என்பதை சொல்லும் விதமாகப் படம் உள்ளது.
சூர்யா நடிப்பில் பல ஆண்டுகளுக்கு முன் வெளியான வேல் படத்தில் எப்படி கிராமத்தில் முரட்டுத்தனமான ஒருவரும், சிட்டியில் ஒருவரும் என்பது போல, தமிழ்நாட்டின் கிரமத்தில் ஒருவர், வெளிநாட்டில் ஐடி ஊழியராக ஒருவர் என அன்பறிவு படத்தின் டிரெயலர் கதையை கூறுகின்றது.
மாஸ், ஆக்ஷன், லவ் என அன்பறிவு படம் ஒரு மசாலா படமாக உருவாகியுள்ளது. கண்டிப்பாக ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியாகும் வித்தியாசமான ஆக்ஷன் படமாக இது இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.