Connect with us

தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் கனமழை: சென்னை நுங்கம்பாகத்தில் ஒருமணி நேரத்தில் 6 செமீ மழை!

Published

on

சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் நேற்றிரவு முழுவதும் கனமழை பெய்தது. கிண்டி, வடபழனி, அண்ணாசாலை, பாரிமுனை, வியாசர்பாடி, தண்டையார்பேட்டை உள்ளிட்ட இடங்களில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கன மழை பொழிந்தது. நுங்கம்பாக்கத்தில் மட்டும் ஒரு மணி நேரத்தில் 6 சென்டிமீட்டர் மழை பெய்தது. பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

குரோம்பேட்டை, அம்பத்தூர் மற்றும் திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே மழைநீர் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொடர்ந்து 2 மணி நேரமாக கனமழை பெய்தது. மேலும் மீஞ்சூர், சோழவரம், கும்மிடிபூண்டி, திருத்தணி உள்ளிட்ட இடங்களிலும் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்தில் ஒரு மணி நேரம் மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தேனி மாவட்டம் போடி பகுதியில் பெய்யும் தொடர் மழை காரணமாக அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான பெரியாற்று கோம்பை, குரங்கணி துறை உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்துள்ளது
திருவண்ணாமலை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பெய்த கனமழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. அங்குள்ள சில கிராமங்களில் போதிய வடிகால் வசதிகள் இல்லை தெருக்களில் தண்ணீர் தேங்கியது. அதில் பத்துக்கும் அதிகமான வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் அவதி அடைந்தனர்

வட மேற்கு வங்க கடல் பகுதியில் வரும் 21ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக கோவை, தேனி, கிருஷ்ணகிரி, சேலம், பெரம்பலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது

நாளை திங்கள்கிழமை கோவை, தேனி, நீலகிரி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவள்ளூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் மட்டும் லேசானது முதல் மிதமான துவரை மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
phi phi. : upptäck hemligheterna bakom din vistelse. Long thiên minh cùng Đường long cũng gia nhập chiến đoàn, long thiên minh xông thẳng về phía Đường long nhưng Đường long bất vi sở động không có ý nghĩ dung hợp yêu linh mà ta cầm thương đâm ra.