சினிமா செய்திகள்
கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தில் இணைந்த மேலும் ஒரு பிரபலம்!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் ‘விக்ரம்’. இந்த படத்தின் டிரைலர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தில் அப்டேட்களை அவ்வப்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்து வருகிறார் என்பது தெரிந்ததே.
அந்த வகையில் சற்று முன் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ‘விக்ரம்’ படத்தின் ஒளிப்பதிவாளர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த படத்திற்கு க்ரிஷ் கங்காதரன் என்பவர் ஒளிப்பதிவு செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பை மிக விரைவில் அறிவிக்க இருப்பதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கமலஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகவிருக்கும் ‘விக்ரம்’ திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Happy to have you onboard @girishganges brother 👍 Cast updates coming soon! pic.twitter.com/ZurXzh92Px
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) July 2, 2021