சினிமா செய்திகள்
ஹன்சிகா – சிம்பு மிரட்டும் ‘மஹா’ டீசர்!

பல ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்து வரும் ‘மஹா’ திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. இது கதாநாயகியை மையமாக வைத்து எடுத்துள்ளப் படம். ஹன்சிகா தான் மெயின் ரோல் செய்துள்ளார்.
அவருக்கு ஜோடியாக சிம்பு, கேமியோ ரோலில் நடித்துள்ளார். எடை குறைப்பில் இறங்குவதற்கு முன்னர் சிம்பு நடித்தப் படம் இது என்பது, அவரது தோற்றத்தில் தெரிகிறது. மிகவும் முக்கியமான காவலர் கதாப்பாத்திரத்தில் ஸ்ரீகாந்த் நடித்துள்ளார். இது ஹன்சிகாவின் 50 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.ஆர்.ஜமீல் என்னும் அறிமுக இயக்குநர் இந்தப் படத்தை இயக்கி உள்ளார். கருணாகரனுக்கும் படத்தில் முக்கிய ரோல் ஒதுக்கப்பட்டு உள்ளது. விரைவில் இந்தப் படம் ரிலீஸ் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. தியேட்டரில் ரிலீஸ் ஆகுமா, அல்லது நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்படுமா என்பது குறித்து படக்குழு தகவல் தெரிவிக்கவில்லை.
படத்தின் டீசர் இதோ: