இந்தியா
ஆண்டிராய்டு போன்களில் தவறான ஆதார் இலவச சேவை எண் பதிவேற்றம், மன்னிப்பு கோரிய கூகுள்!

ஆண்டிராய்டு போன்களில் தவறான ஆதார் இலவச சேவை எண்ணான 1800-300-1947 UIDAI என்ற பெயரில் தொடர்பு பட்டியலில் டீபால்ட்டாகச் சேர்க்கப்பட்டதற்கு நாங்கள் தான் காரணம் என்றும் அந்தத் தவறுக்குகு மன்னிப்புக் கேட்கிறோம் என்றும் அதனைப் பயனர்கள் பதிவு நீக்கம் செய்துகொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.
ஆதார் பாதுகாப்புக் குறித்துப் பல சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில் திடீர் என்று அனைத்துப் போன்களிலும் ஆதார் இலவச சேவைக்கான என்ற எண் என்று தவறாகப் பதிவு செய்யப்பட்டு இருந்தது பெறும் சர்சையினை ஏற்படுத்தியது. பின்னர் இதற்கு விளக்கம் அளித்த இந்திய தனிநபர் அடையாள ஆணையம் நாங்கள் டெலிகாம் நிறுவனங்களுக்கும், போன் உற்பத்தியாளர்களுக்கு இது குறித்து எந்தக் கோரிக்கையும் வைக்கவில்லை என்று டிவிட்டர் மூலம் தெரிவித்து இருந்தது.
இந்தத் தவறான எண் பதிவேற்றம் குறித்துச் சமுக வலைத்தளங்களில் மிகப் பெரிய சர்ச்சை எழுந்து வந்த நிலையில் அதனைத் தவறாக நாங்கள் தான் காரணம் என்று கூகுள் ஒப்புக்கொண்டுள்ளது.
2014-ம் ஆண்டு எங்கள் குழுவிற்குக் கிடைத்த தகவலின் பட்டி இந்தப் பதிவேற்றப்பட்டுவிட்டது. தவறுக்கு மன்னிப்புக் கோருகிறோம் என்றும் அதனை எளிதாகப் பதிவு நீக்கம் செய்துகொள்ளலாம் என்றும் வரும் காலத்தில் இது போன்ற தவறுகள் நடைபெறாது என்றும் கூகுள் தெரிவித்துள்ளது.
இந்திய தனிநபர் அடையாள ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இலவச சேவை எண் “1947” என்பது குறிப்பிடத்தக்கது.