வணிகம்
BREAKING UPDATE: சென்னையில் அபர்ண தங்கத்தின் விலை மேலும் சரிவு

சென்னையில் இன்று (ஜனவரி 30, 2026) அபர்ண தங்கத்தின் விலை மேலும் குறைந்துள்ளது. ஒரே நாளில் ஏற்பட்ட இந்த விலை சரிவு நகை வாங்குவோருக்கு பெரிய நிம்மதியாக அமைந்துள்ளது.
சந்தை நிலவரப்படி,
22 காரட் தங்கம் ஒரு சவரனுக்கு ரூ. 7,600 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
இதன் மூலம், ஒரு சவரன் 22 காரட் தங்கத்தின் தற்போதைய விலை ரூ. 1,26,800 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும்,
ஒரு கிராம் தங்கம் ரூ. 350 குறைந்து ரூ. 15,850 ஆக விற்பனை
8 கிராம் (1 சவரன்) தங்கம் ரூ. 4,800 குறைந்து தற்போதைய விலைக்கு வந்துள்ளது
தங்க விலை தொடர்ச்சியாக குறைந்து வருவதால், கடந்த சில நாட்களாக விலை உயர்வால் காத்திருந்த வாடிக்கையாளர்கள் மீண்டும் நகை கடைகளுக்கு வரத் தொடங்குவார்கள் என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
விழாக்காலம் மற்றும் திருமண சீசனை முன்னிட்டு, இந்த விலை சரிவு நகை விற்பனையை மேலும் ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



















