தமிழ்நாடு
அதிரடியாக குறைந்தது தங்கம் விலை: இன்றைய விலை என்ன?

தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களாக ஏற்றத்தில் இருந்த நிலையில் இன்று அதிரடியாக தங்கம் விலை சரிந்துள்ளது. இன்றைய தங்கம் வெள்ளி விலை குறித்து தற்போது பார்ப்போம்.
சென்னையில் தங்கத்தின் விலை நேற்று கிராம் ஒன்றுக்கு ரூபாய் 4525.00 என இருந்த நிலையில் இன்று விலை ரூபாய் 4504.00 என விற்பனையாகி வருகிறது. இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 21 ரூபாய் இறங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 36200.00 என நேற்று விற்பனையாகி வந்த நிலையில் இன்று 168 ரூபாய் குறைந்து ரூபாய் 36032.00 என ஒரு சவரன் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
24 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூபாய் 4868.00 எனவும் ஒரு சவரன் விலை ரூபாய் 38944.00 எனவும் விற்பனையாகி வருகிறது. 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூபாய் 21 குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் இன்று சரிந்துள்ளது. நேற்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 72.30 என விற்பனையாகி வந்த நிலையில் இன்று 40 காசுகள் குறைந்து ரூபாய் 71.90 என விற்பனையாகி வருகிறது. இன்று ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூபாய் 71900.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



















