Connect with us

இந்தியா

ஒரே நாளில் ரூ.1.45 லட்சம் கோடி நஷ்டம்.. 3வது இடத்தில் இருந்து 7வது இடம் சென்ற அதானி!

Published

on

அதானி குழுமத்தின் சொத்துக்கள் இன்று ஒரே நாளில் 1.45 லட்சம் கோடி சரிவடைந்ததை அடுத்து உலக பணக்காரர் பட்டியலில் அவர் மூன்றாவது இடத்தில் இருந்து ஏழாவது இடத்திற்கு பின்னுக்கு தள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.

உலக பணக்காரர் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்த பிரபல இந்திய தொழிலதிபர் அதானி நிறுவனங்கள் மீது திடீரென ஹிண்டர்பெர்க் என்றா ஆராய்ச்சி நிறுவனம் குற்றம் காட்டியது.

அதானி நிறுவனம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் பங்குச்சந்தையில் மோசடியான பண பரிவர்த்தனை செய்ததாகவும் குற்றம் சாட்டியது. இந்த குற்றச்சாட்டை அடுத்து அதானி நிறுவனத்தின் பங்குகள் பயங்கரமாக சரிந்தன.

இன்று காலை பங்குச்சந்தை தொடங்கியவுடன் அதானி நிறுவனங்களின் பங்குகள் பெரும் அளவு சரிந்ததை அடுத்து அவரது சொத்து மதிப்பு 1.45 லட்சம் கோடி சரிந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் போர்ப்ஸ் ரியல் டைம் பில்லியனர் கணக்கின்படி அதானி உலக பணக்காரர்கள் பட்டியலில் ஏழாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அவர் மூன்றாவது இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதானி சொத்து மதிப்பு இன்று வர்த்தக நேர தொடக்கத்தில் 18 பில்லியன் டாலர் முதல் 100 பில்லியன் டாலர் வரை சரிந்துள்ளதாகவும் அதானி தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்சைவிட கீழே உள்ளார் என்றும் அவரது சொத்து மதிப்பு 104 பில்லியன் டாலர் என்றும் பட்டியலிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அதானி நிறுவனத்தின் பங்குகள் மிகப்பெரிய ஏற்றம் கண்டபோது அதானி ஒரு சில நாட்கள் பணக்காரர்கள் பட்டியல் இரண்டாவது இடத்தில் இருந்தார். அதன் பிறகு அவர் மூன்றாவது இடத்தில் இருந்த நிலையில் தற்போது அவர் திடீரென நான்கு இடங்களில் பின் தங்கியுள்ளதால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக பணக்காரர் பட்டியலில் தற்போது பெர்னார்டு அர்னால்டு முதலிடத்திலும், எலான் மாஸ் இரண்டாவது இடத்திலும், அமேசான் நிறுவனத்தின் ஜெஃப் பிஜோஸ் 3வது இடத்திலும், லேரி எல்லிசன் நான்காவது இடத்திலும், வாரன் பஃபெட் ஐந்தாவது இடத்திலும் பில் கேட்ஸ் ஆறாவது இடத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஹீண்டர்பெக்ஆராய்ச்சி நிறுவனத்தின் மீது வழக்கு தொடர இருப்பதாக அதானி அறிவித்துள்ள நிலையில் அந்த வழக்கை சந்திக்க தாங்கள் தயாராக இருப்பதாகவும் தாங்கள் கேட்ட எந்த கேள்விக்கும் இதுவரை அதானி நிறுவனத்திடம் இருந்து பதில் வரவில்லை என்றும் ஹிண்டர்பெர்க் கூறியுள்ளது. கடந்த 24 ஆம் தேதி ஹண்டர்பெர்க் ரிசர்ச் அறிக்கை காரணமாக தான் தற்போது அதானி குழுமத்தைச் சேர்ந்த ஏழு நிறுவனங்களின் பங்குகள் சரிந்துள்ளதாக கூறப்படுகிறது.

இன்று அதாவது வெள்ளிக்கிழமையன்று அதானி டோட்டல் கேஸ் பங்கு விலைகள் 20% குறைந்து, பிஎஸ்இயில் குறைந்தபட்சமாக ரூ.2,934 ஆகவும், அதானி கிரீன் 19% குறைந்து ரூ.1,488 ஆகவும் குறைந்தது. அதானி குழுமத்தின் அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் 8%க்கும் மேல் சரிந்தன, அதே சமயம் அதானி போர்ட்ஸ் (APSEZ) பங்குகள் 10% சரிந்து புதிய 52 வாரக் குறைந்த நிலையை எட்டியது. அதானி டிரான்ஸ்மிஷன் 17%க்கும் மேல் சரிந்தது, அதானி பவர் மற்றும் அதானி வில்மர் 5% குறைந்தது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?