Connect with us

தமிழ்நாடு

இரவு நேரங்களில் மட்டுமே சாலையோர தூய்மைப் பணி: சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

Published

on

சென்னை மாநகராட்சியில் இனி போக்குவரத்துக்கு இடையூறு வராத வகையில் சாலையோர தூய்மை பணியில் நடத்தப்படும் என்றும் அந்த வகையில் இனிய இரவு நேரங்களில் கூடுதல் ஊழியர்கள் மற்றும் கூடுதல் வாகனங்கள் மூலம் குப்பைகள் அகற்றப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்‌ உள்ள சாலைகளில்‌ போக்குவரத்து இடையூறு ஏற்படுவதை தவிர்குகும்‌ பொருட்டு கூடுதல்‌ வாகனங்கள்‌ மற்றும்‌ பணியாளர்களின்‌ மூலம்‌ இரவு நேரங்களில்‌ தூய்மைப்‌ பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 கோட்டங்களிலும்‌ திடக்கழிவு மேலாண்மைத்துறை சார்பாக தினந்தோறும்‌ சுமார்‌ 5,000 மெட்ரிக்‌ டன்‌ குப்பைகள்‌ சேகரிக்கப்பட்டு அப்புறபடுத்தப்பட்டு வருகின்றது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களின்‌ உத்தரவின்படி மாண்புமிகு, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்‌ அவர்கள்‌ அனைத்து பேருந்து சாலைகள்‌ மற்றும் உட்புறச்‌ சாலைகளிலும்‌ தூய்மை பணியினை தீவிரபடுத்த அறிவுறுத்தியுள்ளார்கள்‌.

பெருநகர சென்னை மாநகராட்‌ சிக்குட்பட்ட பகுதிகளில்‌ 38 கிலோ மீட்டர்‌ நீளமுள்ள 471 பேருந்து சாலைகளும்‌, 5,270 கிலோ மீட்டர்‌ நீளமுள்ள 34,640 உட்புற சாலைகளும்‌ உள்ளன. இந்த சாலைகளில்‌ மாநகராட்சியின்‌ சார்பில்‌ தூய்மை பணிகள்‌ நாள்தோறும்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும்‌ மாநகரின்‌ 200 வார்டுகளிலும்‌ சேகரிக்கப்படும்‌ சுமார்‌ 5000 மெட்ரிக்‌ டன் அளவிலான குப்பைகள்‌ பல்வேறு வகையான வாகனங்களைக்‌ கொண்டு குப்பைகளை கையாளும்‌ மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. சாலைகளில்‌ தூய்மைப்‌ பணிகள்‌ பகலில்‌ மேற்கொள்ளப்படும்‌ பொழுதும்‌, குப்பைகள்‌ அகற்றப்படும்‌ பொழுதும்‌ பேருந்து மற்றும்‌ உட்புற சாலைகளில்‌ பொதுமக்களுக்கு போக்குவரத்து இடையூறுகள்‌ ஏற்படுகின்றன.

இதனை கருத்தில்‌ கொண்டு பேருந்து சாலைகளிலும்‌, உட்புற சாலைகளிலும்‌ மாநகராட்சி தூய்மைப்‌ பணியாளர்கள்‌ மற்றும்‌ தூய்மை பணி மேற்கொள்ளும்‌ தனியார்‌ நிறுவனங்களின்‌ சார்பில்‌ இரவு நேரங்களில்‌ தூய்மை பணிகள்‌ தீவிரமாக மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்பொழுது தூய்மை பணிகள்‌ மேற்கொள்ளும்‌ பொழுது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதை முற்றிலும்‌ தவிர்க்கும்‌ வண்ணம்‌ மாநகராட்சியின்‌ திடக்கழிவு மேலாண்மை துறையின்‌ மூலம்‌ பேட்டரியால்‌ இயங்கும்‌ 255 வாகனங்கள்‌, 53 மூன்று சக்கர வாகனங்கள்‌, 147 கம்பாக்டர்‌ வாகனங்கள்‌, 50 மெக்கானிக்கல்‌ ஸ்வீப்பர்‌ வாகனங்கள்‌, 23 டிப்பர்‌ லாரிகளும்‌ மற்றும்‌ 1786. தூய்மைப்‌ பணியாளர்களும்‌ பலசியமர்த்தப்பட்டு பணிகள்‌ முடுக்கிவிடப்பட்டுள்ளன.

எனவே பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில்‌ உள்ள சாலைகளில்‌ கூடுதல்‌ வாகனங்கள்‌ மற்றும்‌ பணியாளர்களை கொண்டு அனைத்து தூய்மை பணிகளையும்‌ இரவு நேரங்களிலேயே முடித்து பொதுமக்களின்‌ போக்குவரத்திற்கு எவ்வித இடையூறுமின்றி பணிகளை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வணிகம்24 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?