வீடியோ
ஜி வி பிரகாஷின் ‘ஐங்கரன்’ டீஸர் ரிலீஸ்!
ஜி.வி. பிரகாஷ், மஹிமா நம்பியார் நடிப்பில் உருவாகியுள்ள ஐங்கரன் படத்தின் டீஸர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
பொறியியல் படிக்கும் மாணவன் சிலரின் பொறிகளில் சிக்கி எப்படி தீப்பொறி ஆகிறான் என்ற கதையம்சத்துடன் ஈட்டி படத்தை இயக்கிய ரவி அரசு ஆக்ஷன் பேக்டு த்ரில்லர் படமாக ஐங்கரனை உருவாக்கியுள்ளார்.

இப்படத்தில் ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக குற்றம் 23 படத்தின் நாயகி மஹிமா நம்பியார் நடித்துள்ளார். மேலும், காளி வெங்கட், அருள்தாஸ், ஆடுகளம் நரேன், ஹரிஷ் பெரடி, அபிஷேக் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் விரைவில் ரிலீசாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
















