Connect with us

இந்தியா

நிர்மலா சீதாராமனின் கடைசி பட்ஜெட்.. முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கும் 10 முக்கிய அம்சங்கள்!

Published

on

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கும் நிலையில் இந்த பட்ஜெட்டிற்கு பல்வேறு எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக நரேந்திர மோடி தலைமையிலான அரசின் கடைசி பட்ஜெட் என்பதால் அடுத்த ஆண்டு தேர்தலை எதிர் நோக்க உள்ளதால் இந்த பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினர் எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் எண்ணம் மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில் முதலீட்டாளர்களுக்கு என்னென்ன சலுகைகள் இந்த பட்ஜெட்டில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு குறித்து தற்போது பார்ப்போம்.

1. நீண்ட கால மூலதன ஆதாய வரியை (LTCG) நீக்குதல்: 2018 ஆம் ஆண்டின் நிதிச் சட்டத்தில், பட்டியலிடப்பட்ட ஈக்விட்டி பங்குகள் மற்றும் பங்கு சார்ந்த பரஸ்பர நிதிகளின் யூனிட்களின் விற்பனையிலிருந்து ஆண்டுக்கு ரூ. 1 லட்சத்திற்கும் அதிகமான நீண்ட கால மூலதன ஆதாயங்களுக்கான வரிவிதிப்பை மீண்டும் அறிமுகப்படுத்த, மூலதன ஆதாய வரிவிதிப்பு முறையின் கீழ் மாற்றங்கள் செய்யப்பட்டன. LTCG வரியின் கீழ், ரூ. 1 லட்சத்துக்கும் மேலான ஆதாயங்கள் ஒரு வருடத்திற்கு மேல் இருந்தால் 10% வரி விதிக்கப்படும். இந்த வரியை நீக்க வேண்டும் என முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

2. PPF வரம்பை ரூ.3 லட்சமாக அதிகரிக்கப்படுமா? PPF என்பது நமது நாட்டில் பாதுகாப்பான முதலீட்டு விருப்பங்களில் ஒன்றாகும். பிரிவு 80C இன் கீழ் வரிச் சலுகைகளை இது வழங்குகிறது. ICAI (Instute of Chartered Accountants of India) பொது வருங்கால வைப்பு நிதிக்கான (PPF) பங்களிப்புக்கான வருடாந்திர வரம்பை தற்போதைய பட்ஜெட் 2023 இல் ரூ. 1.5 லட்சத்தில் இருந்து ரூ. 3 லட்சமாக உயர்த்த பரிந்துரைத்துள்ளது.

3. ரூ. 5 லட்சம் வரையிலான வங்கி எஃப்டிகளுக்கு வரி ரத்து செய்யப்படுமா? 2023 பட்ஜெட்டில் ரூ. 5 லட்சம் வரையிலான நிலையான வைப்புத்தொகைக்கான வட்டியை வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று முதலீட்டாளர்கள் விரும்புகின்றனர். ரூ.5 லட்சம் வரை டெபாசிட் செய்தால் வரி இல்லை என்ற அறிவிப்பு வெளியானால் சேமிப்பு அதிகமாகும்.

4. கடன் இணைக்கப்பட்ட சேமிப்புத் திட்டத்தை (DLSS) அறிமுகப்படுத்துதல்; கடந்த பத்தாண்டுகளில், ஆசியாவின் முக்கிய நிதிச் சந்தைகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது. இருப்பினும், இந்திய கார்ப்பரேட் பத்திர சந்தை இன்னும் மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. சில்லறை முதலீட்டாளர்களின் நீண்ட கால சேமிப்பை அதிக கடன்-மதிப்பிடப்பட்ட கடன் கருவிகளாக மாற்றுவதற்கு ஈக்விட்டி லிங்க்டு சேவிங்ஸ் ஸ்கீம் (ஈஎல்எஸ்எஸ்) முறையில் “கடன் இணைக்கப்பட்ட சேமிப்பு திட்டம்” (டிஎல்எஸ்எஸ்) அறிமுகப்படுத்த வேண்டும்.

5. இன்ட்ரா-ஸ்கீம் ஸ்விட்சுகள்: அதே மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீட்டை மாற்றுவது ஐடி சட்டம், 1961 இன் பிரிவு 47 இன் கீழ் “பரிமாற்றம்” ஆகக் கருதப்படாது, மேலும் அவை மூலதன ஆதாய வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும். எனவே, வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 47 இன் கீழ் ஒரு புதிய துணைப்பிரிவின் கீழ் சேர்க்கப்பட வேண்டும்.

6. கடன் பத்திரங்கள் & கடன் பரஸ்பர நிதிகளில் ஒரே மாதிரியான வரிவிதிப்பு: பட்டியலிடப்பட்ட கடன் பத்திரங்கள், கடன் பரஸ்பர நிதிகள் ஆகிய இரண்டையும் இணையாகக் கொண்டு வந்து ஒரே மாதிரியான வரியை விதிக்க வேண்டும். பட்டியலிடப்பட்ட கடன் பத்திரங்களில் 65% அல்லது அதற்கு மேற்பட்ட முதலீடுகள் 12 மாதங்களுக்கும் மேலாக வைத்திருந்தால், அவை நீண்ட காலமாக முதலீடு செய்யப்படாத நிதி சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வது. மேலும் பட்டியலிடப்பட்ட கடன் பத்திரங்கள் / மற்றும் ZeroCoupon பத்திரங்களில் (பட்டியலிடப்பட்ட அல்லது பட்டியலிடப்படாத) நேரடி முதலீட்டிற்கான குறைந்தபட்ச வைத்திருக்கும் காலத்தை 36 மாதங்களுக்கு உயர்த்துதல்.

7. ₹500க்கு பதிலாக ELSS இல் எந்தத் தொகையையும் முதலீட்டாக அனுமதிக்கவும்: AMFI இன் படி, ஈக்விட்டி லிங்க்டு சேவிங்ஸ் ஸ்கீம், 2005 இன் விதி 3ஐ திருத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. ELSS இல் முதலீடுகள் ₹500 இன் மடங்குகளாக இருக்க வேண்டும் மற்றும் குறைந்தபட்சம் ₹500க்கு உட்பட்டு எந்த தொகையின் முதலீடுகளையும் அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையை நீக்குவது.

8. MF & ULIP களின் மூலதன ஆதாயங்களுக்கு ஒரே மாதிரியான வரி விதித்து சமநிலையை கொண்டு வர வேண்டும்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?