வணிகம்
EPF பாஸ்வேட் மறந்துட்டீங்களா? உடனே இதை பண்ணுங்க – இல்லனா கணக்கு ப்ளாக் ஆகலாம்!

உங்களுடைய EPF பாஸ்புக்-ஐ அணுகுவதற்கான Password-ஐ மறந்துவிட்டீர்களா? கவலைப்பட வேண்டாம்! பாஸ்வேட் இல்லாமல் உங்கள் PF கணக்கை பார்வையிட முடியாது, இதனால் உங்களது சேமிப்பு மற்றும் பணமதிப்பீடுகளை சரிபார்ப்பது சிரமமாகும்.
EPFO (Employees’ Provident Fund Organisation) என்பது ஊழியர்களுக்கான சேமிப்பு, பென்ஷன் மற்றும் காப்பீட்டு திட்டங்களை ஒருங்கிணைக்கும் அரசு அமைப்பாகும். இதில் உறுப்பினராக இருக்கும் ஒவ்வொருவருக்கும் UAN (Universal Account Number) வழங்கப்படுகிறது. இந்த UAN மூலம் ஆன்லைனில் PF விவரங்களை பார்வையிடலாம்.
பாஸ்வேட் மறந்துவிட்டால் என்ன செய்யலாம்?
முதலில் 👉 https://www.epfindia.gov.in இணையதளத்தை திறக்கவும்.
அதன் முகப்புப் பக்கத்தில் இருக்கும் “Forget Password” எனும் விருப்பத்தை தேர்வு செய்யவும்.
உங்கள் UAN எண்ணை உள்ளிட்ட பிறகு, “Verify” என்பதை கிளிக் செய்யவும்.
உங்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP வரும். அதைப் பெற்று, குறிப்பிடவும்.
பிறகு, நீங்கள் விரும்பும் புதிய Password-ஐ இரண்டு முறை டைப் செய்து உறுதி செய்யவும்.
இனிமேல், இந்த புதிய Password மூலம் உங்கள் EPF கணக்கை மீண்டும் Login செய்து பயன்படுத்தலாம்.
