Connect with us

வணிகம்

பனாசோனிக் அதிரடி! உலகளவில் 10,000 பேர் பணி நீக்கம் – லாபநோக்கில் கடும் நடவடிக்கை!

Published

on

உலகளவில் வீட்டு உபயோக சாதனங்கள் மற்றும் தொழில்நுட்ப பொருட்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஜப்பான் நிறுவனமான பனாசோனிக், தற்போது பெரிய அளவிலான பணிநீக்கம் அறிவித்துள்ளது. ஏசி, பிரிஜ், வாஷிங் மெஷின், சோலார் பேனல்கள், முக அடையாளம் அடையாளமிடும் கருவிகள் மற்றும் டெஸ்லா மின்சார கார்களுக்கு பேட்டரிகள் ஆகியவற்றை உருவாக்கும் இந்நிறுவனம், இப்போது தனது வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் முக்கியமான மாற்றங்களை மேற்கொள்கிறது.

அதன்படி, 2026 மார்ச் மாதத்துக்குள் உலகம் முழுவதும் 10,000 பணியாளர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக பனாசோனிக் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில், ஜப்பானில் மட்டும் 5,000 பேர், மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளில் மேலும் 5,000 பேர் பணி இழப்பீடு செய்யப்பட உள்ளனர்.

இந்நடவடிக்கையின் மூலம், லாபமீட்ட முடியாத வணிகங்கள் மூடப்படவுள்ளன என்றும், நிறுவனத்தின் செயல்திறனையும் பணிச்சுமையையும் சீரமைப்பது குறிக்கோளாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

Translate »
And offers on one mobile page – with DR68 SEO and zero monthly fees..