தொழில்நுட்பம்
‘பிக் பில்லியன் டே’ விற்பனையின் போது ஸ்மார்ட்போனுடன் இன்சூரன்ஸ்.. பிளிப்கார்ட் அதிரடி!

இந்தியாவின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் அக்டோபர் 10-ம் தேதி முதல் பிக் பில்லியன் டே சலுகைகளை வழங்க உள்ளது. சலுகைகள் ஒரு பக்கம் உள்ள நிலையில் ஸ்மார்ட் போன் வாங்குபவர்களுக்கு அதற்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் காப்பீடும் சேர்த்து அளிக்க உள்ளனர்.
இதற்காகப் பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்படப் பிளிப்கார்ட் ஒப்பந்தம் போட்டுள்ளது.
அக்டோபர் 10-ம் தேதி முதல் பிளிப்கார்ட் இணையதளத்தில் ஸ்மார்ட்போன் வாங்கும் போது 99 ரூபாய்க்குப் போன் காப்பீட்டைச் சேர்த்து வாங்கினால் போன டெலிவரி செய்யப்பட்ட உடன் காப்பீடு செயல்படத் தொடங்கிவிடும்.
காப்பீடு குறித்த விவரங்கள் மின்னஞ்சல் மூலம் அளிக்கப்படும். ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே உடைந்தால், திருடு போனால் இந்தக் காப்பீடு மூலம் போனை திரும்பப் பெற முடியும் என்று செய்தி சுருள் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.










