வணிகம்
சீனாவுக்கு போட்டியாக உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படும் மேட்-இன்-தமிழ்நாடு தயாரிப்பு!

தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டு வரும் ஸ்மார்ட் வாட்ச் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.
இந்தியாவின் முன்னணி ஸமார்ட் வாட்ச் நிறுவனமான ஃபைர் போல்ட், இந்தியாவிலிருந்து வெளியாடுகளிக்கு ஏற்றுமதி செய்யும் முதல் ஸ்மார்ட் வாட்ச் பிராண்டு என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
சிர்மா டெக்னாலஜிஸ் நிறுவனம் சீனாவுக்கு அடுத்தபடியாக சென்னையில் உள்ள தொழிற்சாலையில் தான் அதிகளவில் ஸ்மார்ட் வாட்சை தயாரித்து வருகிறது. இங்கு மட்டும் ஒரு நாளைக்கு 1 லட்சம் வாட்ச்கள் தயாரிக்கப்படுகின்றன.

#image_title
இப்போது இந்த நிறுவனம் சீனாவை மட்டும் நம்பி இல்லாமல், இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் ஸ்மார்ட் வாட்ச்கலை அதிகளவில் ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டுள்ளது.
பிப்ரவரி மாதம் முதல் இந்த ஏற்றுமதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து ஸ்மார்ட் வாட்ச் தயாரிக்கும் பிற நிறுவனங்களான போட், நாய்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் விரைவில் தங்களது தயாரிப்புகளை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளன.
என்ன தான் மேட்-இன்-இந்தியா என கூறப்பட்டாலும் இந்த தயாரிப்புகளில் பயன்படுத்தும் 50 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட முக்கிய பாகங்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.