சினிமா செய்திகள்
சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ அட்டகாசமான டிரைலர்!

சூர்யா நடித்து முடித்துள்ள ’எதற்கும் துணிந்தவன்’ என்ற திரைப்படம் வரும் மார்ச் 11ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
சூரரைப்போற்று, ஜெய்பீம் ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஓடிடியில் ரிலீஸ் ஆன நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு திரையரங்குகளில் சூர்யாவின் ரசிகர்களுக்காக வெளியாக உள்ள திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’ என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் டிரைலரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் ட்ரெய்லர் வீடியோ வைரலாகி வருகிறது.
சூர்யாவின் அதிரடி காட்சிகள் தான் இந்த டிரைலரில் பாதிக்கு மேல் இடம் பெற்று உள்ளது. மேலும் சில செண்டிமெண்ட் காட்சிகள், ரொமான்ஸ் காட்சிகள் மற்றும் காமெடி காட்சிகளும் இந்த டிரைலரில் உள்ளது.
இந்த படத்தின் மிகப்பெரிய பிளஸ் இமானின் பின்னணி இசை என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாண்டிராஜின் அற்புதமான வசனங்கள் காமெடியான கலக்கல் வசனங்கள் இந்த படத்திற்கு மெருகேற்றுகிறது. மொத்தத்தில் ஒரு சூப்பர்ஹிட் கமர்ஷியல் படத்தை சூர்யா ‘எதற்கும் துணிந்தவன்’ மூலம் கொடுத்து உள்ளார் என்பது இந்த ட்ரெய்லரின் மூலம் தெரிய வருகிறது.