தமிழ்நாடு
2 மாவட்டங்களில் இன்று அரைநாள் பள்ளிகளுக்கு விடுமுறை!

கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள இரண்டு மாவட்டங்களில் இன்று மதியத்திற்கு மேல் பள்ளி விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த சில நாட்களாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றன என்பதை ஏற்கனவே பார்த்து வருகிறோம்
குறிப்பாக வங்கக்கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததால் இன்று திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் மயிலாடுதுறை ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை என்ற அறிவிப்பு வெளியானது
என்பதை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி கனமழை காரணமாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய இரண்டு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று மதியத்திற்கு மேல் அரை நாள் விடுமுறை என மாவட்ட நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்
மேலும் நாளையும் கனமழை தொடரும் என்பதால் ஒரு சில மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

















